Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் ரூ.200 கோடி திட்டப்பணிகளை துணை முதல்வர் துவக்கி வைக்கிறார்

Print PDF

தினகரன் 06.08.2010

நெல்லை மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் ரூ.200 கோடி திட்டப்பணிகளை துணை முதல்வர் துவக்கி வைக்கிறார்

நெல்லை, ஆக. 6: நெல்லை மாவட்டத்தில் இன்றும், நாளையும் ரூ.200 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். வண்ணார்பேட்டையில் ரூ.16.40 கோடி மதிப்ப¤ல் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தையும் இன்று காலை ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

நெல்லை மாவட்டத்தில் அரசு த¤ட்டப் பணிகள் துவக்க விழா, அடிக்கல் நாட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்றும், நாளையும் நடக்கிறது. இதற்காக துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று நெல்லை வந்தார். சாரதா கல்லூரி அருகே மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

40 ஆயிரம் பேருக்கு உதவி

நெல்லை மாவட்டத்தில் 2 நாட்கள் துணை முதல்வர் பங்கேற்கும் அரசு விழாக்களிலும் ரூ.78.80 கோடி செலவில் நிறைவடைந்த 447 அரசு கட்டிடங்களை திறந்து வைத்து, ரூ.97.68 கோடி மதிப்பிலான 123 பணிகளுக்கு துணை முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். ரூ.26.22 கோடியில் 40 ஆயிரத்து 161 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மொத்தம் ரூ.202.69 கோடி மதிப்பிலான பணிகளை துவக்கி வைக்கிறார்.

வண்ணார்பேட்டை மேம்பாலம் இன¢று திறப்பு

நெல்லை மாவட்டத்தில் அரசு த¤ட்டப் பணிகள் துவக்க விழா, அடிக்கல் நாட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்றும், நாளையும் நடக்கிறது. இதற்காக துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று நெல்லை வந்தார். சாரதா கல்லூரி அருகே மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நெல்லை வண்ணார்பேட்டை புறவழிச்சாலையில் ரூ.16.40 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை துணை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு திறந்து வைக்கிறார். பின¢னர் டக்கரம்மாள்புரத்தில் அம்பை. ஆறுமுகம் கட்டியுள்ள புதிய இல்லத்தை திறந்து வைக்கிறார்.

இதைத் தொடர்ந்து வீரவநல்லூரில் ரூ.3 கோடியில் மத்திய அமைச்சர் நெப்போலியன் கட்டியுள்ள மயோபதிதசைச்சிதைவு சிகிச்சை மையத்தையும், பின்னர் கல்லிடைக்குறிச்சி பஸ் ஸ்டாண்டையும் திறந்து வைக்கும் துணை முதல்வர், அந்த பகுதியில் திமுக ஏற்பாடு செய்துள்ள கொடியேற்று விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

காலை 10 மணிக்கு அம்பாசமுத்திரம் தீர்த்தபத¤ அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கும் அரசு விழாவில் ரூ.25 கோடியில் அமைக்கப்படும் நெல்லை குலவணிகர்புரம் ரயில்வே மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டி, வி.கே.புரம், மணிமுத்தாறு குடிநீர்த் திட்டப் பணிகளை துவக்கி வைத்து 2 ஆயிரம் சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்குகிறார். விழாவில் ரூ.123.37 கோடி மதிப்பிலான பணிகளை துவக்கி வைக்கிறார்.

மாலை 4.30 மணிக்கு கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள¢ளி மைதானத்தில் நடைபெறும் விழாவில் ரூ.21 கோடியில் கடையநல்லூர் குடிநீர் அபிவிருத்தி திட்டம், ரூ.50 லட்சத்தில் வாஞ்சிநாதன் மணிமண்டபம், அச்சன்புதூரில் 110 கே.வி., துணை மின்நிலையம் ஆகிய பணிகளை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விழாவில் ரூ.60.79 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைக்கிறார். இரவு குற்றாலத்தில் தங்குகிறார்.

துணை முதல்வரின் நெல்லை வருகையை முன்னிட்டு நெல்லை முழு வதும் திமுக கொடிகளும், அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. வண்ணார்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலம் சோடியம் விளக்குகளாலும், சீரியல் தோரணங்களிலும் ஜொலிக்கிறது.