Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அரியலூரை அழகுபடுத்த தீவிரம் நகரில் போஸ்டர் ஒட்ட தடை வாகன நிறுத்த இடம் அறிவிப்பு

Print PDF

தினகரன் 06.08.2010

அரியலூரை அழகுபடுத்த தீவிரம் நகரில் போஸ்டர் ஒட்ட தடை வாகன நிறுத்த இடம் அறிவிப்பு

அரியலூர், ஆக. 6: அரிய லூரை அழகுபடுத்த நகரில் போஸ்டர் ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்த இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் கலெக்டர் ஆபிரகாம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

அரியலூர் நகராட்சியை அழகுபடுத்தவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. நகருக்குள் சுவர் விளம்பரம் செய்வதோ, தனி நபர் கண்ணீர் அஞ்சலி, வணிகம் போன்ற போஸ்டர்களை அரசு மற்றும் தனி யார் கட்டடங்களில் ஒட்ட வோ கூடாது. போக்குவரத்திற்கு இடையூறாக சாலை களில் இரு சக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த கூடாது. அவை நிறுத்த இட ங்கள் அறிவிக்கப்பட்டுள் ளன.

அதன்படி வரும் 15ம் தேதிக்கு பின் அரியலூர் பஸ்நிலையம் எதிரே அண்ணா சிலை&தேரடி வரை எம்எல்ஏ அலுவலகம் முன், தேரடி&கண்ணன் ஜவுளி ஸ்டோர் வரை சாம்பசிவம் பிள்ளை தெரு, கண்ணன் ஜவுளி ஸ்டோர்&சத்திரம் பஸ் நிலையம் வரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன், சத்திரம்&மாதாக்கோயில் வரை நடராஜா தியேட்டர் முன் மற்றும் ஆயிரங்கால்மண்டபம், மாதாக்கோயில்&நிர்மலா பெண்கள் பள்ளி வரை காமராஜர் திடல் வலதுபுறம், சத்திரம்& சுப்பிரமணியபுரம் கோயில் வரை பெரம்பலூர் சாலை ராமசாமி தெரு இடது புறம், சுப்பிரமணிய சுவாமி கோயில்&அரசு மருத்துவமனை வரை அரசு மருத்துவமனை முன், அரியலூர் தினசரி மார்க்கெட்டிற்கு செல்பவர்கள் திரவுபதி அம்மன்கோயில் வடபுறம், சின்னக்கடைத்தெரு செல்வோர் ஆண்டியப்பர் சந்து தெரு, கைலாசநாதர் தெரு செல்பவர்கள் தேரடி மேற்கு மற்றும் வடபுறம் மட்டுமே இரு சக்கர வாகனங்களை நிறுத்தவேண்டும். இந்த விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் ஆபிரகாம் தெரிவித்துள் ளார்.