Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாதாள சாக்கடை திட்டம் பொதுமக்கள் கோரிக்கை

Print PDF

தினகரன் 09.08.2010

பாதாள சாக்கடை திட்டம் பொதுமக்கள் கோரிக்கை

புதுக்கோட்டை, ஆக. 9: புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதாள சாக்கடை திட் டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை நகரத்தில் 16 வீதிகள் அழகிய நகரமாக விளங்கியதை பல்வேறு புத்தகங்கள், கட்டுரைகள் மூலம் தெரியப்படுகிறது. மன்னர் காலத்தில் வீதிகளில் வலம் வரும்போது அவரை மக்கள் வேடிக்கை பார்த்து வணங்குவது வழக்கமாக இருந்து வந்தது. புதுக்கோட்டை நகரத்தை நவீனப்படுத்த பாதாள சாக்கடை திட்டத் தை அரசு கொண்டு வந்துள் ளது.

ஆனால் பல்வேறு வீதி களில் சாக்கடை திட்டம் நிறைவேற்றுவதற்கு வீதிகளில் உள்ள சாக்கடைகள் மற்றும் சாலைகள் இடிக்கப்பட்டு குழாய்கள் பதிக்கப்படும் பணி தொடர் ந்து நடைபெற்று வருகிறது. இது பல இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து வருகிறது. சில இடங்களில் இடையூறுகள் அகற்றப்பட்டுள்ளது. மேலும் பல வீதிகளில் மேடு, பள்ளங்களாக, போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது என்று பொதுமக்கள், வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பாதாள சாக்கடை திட்டம் வரவேற்கக்கூடியது என்றாலும், திட்டத்தை உடனே முடிக்க வேண்டும் என்பது தான் பொதுமக்களின் கோரிக்கை.

குறிப்பாக ஆலங்குடி சாலையில் பாதாள சாக் கடை திட்டத்திற்கு சாலை யில் இடிக்கப்பட்டு குழாய் கள் பதிக்கப்பட்டு வருகிறது. இதேபோல பல்வேறு இடங்களிலும் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. தேக்கம் இல்லாமல் பணிகளை உடனே முடிக்க நகராட்சி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வியாபாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.