Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோபியில் மட்டும் ரூ.1.76 கோடியில் பணிகள் : எம்.எல்.ஏ., செங்கோட்டையன் தகவல்

Print PDF

தினமலர் 11.08.2010

கோபியில் மட்டும் ரூ.1.76 கோடியில் பணிகள் : எம்.எல்.., செங்கோட்டையன் தகவல்

கோபிசெட்டிபாளையம்: "தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து கோபி நகராட்சிக்கு ஒரு கோடியே 76 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது,'' என செங்கோட்டையன் எம்.எல்.., தெரிவித்தார். கோபி எம்.எல்.., தொகுதி வளர்ச்சி நிதி 32 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயில் மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும், .தி.மு.., கவுன்சிலர்களின் வார்டுகளுக்கே ஒதுக்கப்பட்டது. தே.மு.தி.., - .தி.மு.., மற்றும் அ.தி.மு.., வில் இருந்து தி.மு..,வுக்கு தாவிய ராஜாமணி வார்டில் தலா ஒரு பணி ஒதுக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த தி.மு.., - காங்கிரஸ் கவுன்சிலர்கள், ஜூலை 29ம் தேதி நடந்த நகராட்சி கூட்டத்தில், வைக்கப்பட்டிருந்த தீர்மானங்கள் அனைத்தையும் ஒத்தி வைக்ககோரி கடிதம் கொடுத்தனர். தி.மு.., - .தி.மு..,வினரிடையே ஏற்பட்ட மோதலால் நகராட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை.

இதுகுறித்து கோபி எம்.எல்.., செங்கோட்டையன் கூறியதாவது: கோபி நகராட்சியை பொறுத்தவரை அ.தி.மு.., ஆளும் கட்சியாக இருந்தாலும், மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் தி.மு..,வின் மைனாரிட்டி ஆட்சி நடக்கிறது. நான்கு ஆண்டுகளில் கோபி நகராட்சியில், எனது நிதியில் இருந்து ஒரு கோடியே 76 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் எம்.பி., சிவசாமி தொகுதி நிதியில் இருந்து ஐந்து லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், ராஜ்யசபா எம்.பி.,க்கள் கோவிந்தராஜர், மைத்ரேயன் ஆகியோர் நிதியில் இருந்து 31 ரூபாய் லட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எம்.பி., பாலகங்கா நிதியில் இருந்தும் நிதி கேட்கப்பட்டுள்ளது. மாநில அளவில் அ.தி.மு.., எதிர்க்கட்சியாக இருந்தாலும் கோபி நகராட்சியில் நான்கு கோடியே 69 லட்ச ரூபாய் மதிப்பில் குடிநீர் திட்டம், இரண்டு கோடியே ஐந்து லட்ச ரூபாய் மதிப்பில் ஒன்பது தொகுப்பு சாலைகள், ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப்பகுதி மேம்பாட்டு நிதி இரண்டு கோடியே மூன்று லட்ச ரூபாய், கடந்த 2006 முதல் 2010 வரை கல்வி நிதி 91 லட்சத்து 98 ஆயிரம் ரூபாயும், பொதுநிதியில் இருந்து 53 லட்சத்து 2,000 ரூபாயும், குடிநீர் விநியோக நிதியில் இருந்து ஆறு லட்சத்து 57 ஆயிரம் ரூபாயும், பகுதி பங்கீடு திட்டத்தில் 43 லட்சம் ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. நகராட்சியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமல் தள்ளி வைக்கப்பட்டால், பணிகளை தொடர முடியாது. அரசிடம் கேட்கப்படும் நிதியும் வராமல் நின்று விடும். மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள, தி.மு.., - காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். பொதுச்செயலாளர் ஜெயலலிதா வாய்ப்பளித்தால் கோபி தொகுயில்தான் மீண்டும் போட்டியிடுவேன். தொகுதி மாறும் பிரச்னைக்கு இடமில்லை. வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி குறித்து ஜெயலலிதா முடிவு செய்வார். ஈரோடு மாவட்டத்தில் கட்சியை விட்டு யார் சென்றாலும், அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு..,தான் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார். பெருந்துறை எம்.எல்.., பொன்னுதுரை, நகராட்சி தலைவர் ரேவதிதேவி, புறநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட பேரவை செயலாளர் சிந்துரவிச்சந்திரன், மகளிர் அணி செயலாளர் சத்யபாமா, ஒன்றிய செயலாளர் மனோகரன், நகர செயலாளர் காளியப்பன் உள்பட பலர் உடனிருந்தனர்.