Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

43வது வார்டில் 1.92 கோடி வளர்ச்சிப்பணி : பொன்மலை கோட்டத்தலைவர் தகவல்

Print PDF

தினமலர் 20.08.2010

43வது வார்டில் 1.92 கோடி வளர்ச்சிப்பணி : பொன்மலை கோட்டத்தலைவர் தகவல்

திருச்சி: ""நான்கு ஆண்டுகளில் இதுவரை ஒரு கோடியே 92 லட்சம் ரூபாய்க்கு வளர்ச்சிப் பணிகள் தனது வார்டில் நடைபெற்றுள்ளது,'' என்று 43வது வார்டு கவுன்சிலரும், பொன்மலை கோட்டத் தலைவருமான பாலமுருகன் தெரிவித்தார்.

மொத்தம் 60 வார்டு கொண்ட மாநகராட்சியில் 42வது வார்டு கவுன்சிலராக மூன்றாவது முறையாக தி.மு..,வைச் சேர்ந்த பாலமுருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், தனது வார்டு, பொன்மலை கோட்டத்துக்காக பல்வேறு பணிகளை மாநகராட்சி மற்றும் பல்வேறு நிதி மூலம் செய்துள்ளார்.

கடந்த நான்காண்டில் இவரது வார்டில் இதுவரை ஒரு கோடியே 92 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப்பணி நடந்துள்ளது. இதில், சாலை, வடிகால், கட்டிடம், குடிநீர் வழங்கல் உள்பட பல்வேறு பணிகள் அடங்கும்.

பொன்மலை கோட்டத் தலைவர் பாலமுருகன் கூறியதாவது: நான் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட 43வது வார்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிக்காக நாள்தோறும் உழைத்து வருகிறேன். வார்டு மக்கள் மட்டுமின்றி கோட்டத்தலைவர் என்ற முறையில் எனது கோட்டத்துக்குட்பட்ட எந்த பிரச்னையாக இருந்தாலும் தீர்த்து வைக்க தயாராக உள்ளேன். பல கோடி மதிப்பிலான பணிகளை பொன்மலை கோட்டத்துக்கு பெற்றுத்தந்துள்ளேன்.

எனது வார்டில் இதுவரை ஒரு கோடியே 92 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப்பணி மாநகராட்சி நிதி மூலம் செய்துள்ளேன். ஒரு கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பில் 7,050 மீட்டர் சாலைப்பணி நடந்துள்ளது. ஏழு கட்டிடம் 42 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளன. குடிநீர் வழங்கும் பணி நடந்துள்ளது.

மாநகராட்சி பொதுநிதி, எம்.எல்.., சாலை அபிவிருத்தி பணி, எம்.பி., 12வது நிதிக்குழு, காப்பீடு மற்றும் பங்கீட்டு நிதி, மாநகராட்சி மேயர் நிதி போன்ற பல்வேறு நிதி மூலம் இப்பணிகள் நடந்துள்ளது. நிதியுதவி தந்த மேயர், துணைமேயர், எம்.எல்.., எம்.பி., குறிப்பாக அமைச்சர் நேருவுக்கும் நன்றி.

திருச்சி மாநகராட்சி வளர்ச்சிக்காக 481.59 கோடி ரூபாய் நிதி ஒதுக்கித் தந்த முதல்வர் கருணாநிதி, துணைமுதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு மக்களுடன் இணைந்த நன்றி. இவ்வாறு அவர் கூறினார