Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சேலத்தில் இன்று ரூ321 கோடி திட்ட பணிகளை முதல்வர் துவக்கி வைக்கிறார்

Print PDF

தினகரன் 20.08.2010

சேலத்தில் இன்று ரூ321 கோடி திட்ட பணிகளை முதல்வர் துவக்கி வைக்கிறார்

சேலம், ஆக.20: சேலத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம் உள்பட புதிய கட்டிடங்களை முதல்வர் கருணாநிதி இன்று திறந்து வைக்கிறார். இதில் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். முதல்வர் கருணாநிதி இன்று காலை சேலம் வருகிறார்.

வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் பிரபு&கவுதமியின் திருமணத்தை விஎஸ்ஏ பொறியியல் கல்லூரி வளாகத்தில் காலை 9 மணிக்கு முதல்வர் நடத்தி வைக்கிறார்.

நிகழ்ச்சியில் மத்திய, மாநில அமைச்சர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

மாலை 4 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், மாவட்ட எஸ்.பி. அலுவலகம் மற்றும் அரசு நர்சிங் கல்லூரி, தங்கும் விடுதி, பள்ளி கட்டிடங்களை முதல்வர் திறந்து வைக்கிறார்.

ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகள், வழியோர 13 பேரூராட்சிகள், தலைவாசல், கெங்கவல்லி உள்பட 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 921 குடியிருப்புகளுக்கு கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா உள்பட ஸீ321 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளையும் முதல்வர் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இன்று மாலை 6 மணியளவில் பள்ளப்பட்டி ஜவஹர் மில் திடலில் திமுக பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு உரையாற்றுகிறார். மத்திய, மாநில அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

Last Updated on Friday, 20 August 2010 08:45