Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தென்காசி நகராட்சி பகுதியில் ரூ.5.60 கோடியில் வளர்ச்சி பணிகள் : நகராட்சி தலைவர் தகவல்

Print PDF

தினமலர் 07.09.2010

தென்காசி நகராட்சி பகுதியில் ரூ.5.60 கோடியில் வளர்ச்சி பணிகள் : நகராட்சி தலைவர் தகவல்

தென்காசி : தென்காச நகராட்சி பகுதியில் 5 கோடியே 60 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என நகராட்சி தலைவர் கோமதிநாயகம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்காசி நகராட்சி பகுதியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2006-07ம் ஆண்டில் 12வது திட்ட நிதிக்குழு பரிந்துரை திட்டத்தின் கீழ் 6 பணிகள் 27 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், தென்காசி எம்.எல்..கருப்பசாமி பாண்டியன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 10 பணிகள் 28 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், எம்.பி.தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 2 பணிகள் 7 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், நகர்புற கூலி வேலை வாய்ப்பு திட்டத்தில் ஒரு பணி 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், நகராட்சி நிதியில் இருந்து 5 பணிகள் 14 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் நிறைவேற்றப்பட்டன.

2007-08ம் ஆண்டு பகுதி 2 திட்டத்தில் 9 பணிகள் 39 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், இயற்கை இன்னல்கள் திட்டத்தில் 2 பணிகள் 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், 12வது நிதிக்குழு பரிந்துரை திட்டத்தில் 9 பணிகள் 29 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், 2வது மாநில நிதிக்குழு சமன்பாடு நிதி மற்றும் ஊக்க நிதியில் ஒரு பணி 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், எம்.எல்.ஏ.தொகுதி மேம்பாட்டு நிதியில் 27 பணிகள் 38 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒரு பணி 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், நகர்புற கூலி வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒரு பணி 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், நகராட்சி நிதியில் இருந்து 20 பணிகள் 21 லட்சத்து ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், மாநில குழு வெற்றிடம் நிரப்பும் நிதியில் ஒரு பணி 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் நிறைவேற்றப்பட்டது.

2008-09ம் ஆண்டில் 12வது நிதிக்குழு பரிந்துரை திட்டத்தில் 5 பணிகள் 30 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், கல்வி நிதியில் 3 பணிகள் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் 14 பணிகள் 32 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், எம்.பி.தொகுதி மேம்பாட்டு நிதியில் 3 பணிகள் 8 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், நகர்புற கூலி வேலைவாய்ப்பு திட்டத்தில் 2 பணிகள் 4 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், மாவட்ட கலெக்டரின் வளர்ச்சி நிதியில் ஒரு பணி 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பகுதி 2 திட்டத்தில் ஒரு பணி 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், சுற்றுலா துறை பணிகள் மூலம் 8 பணிகள் 37 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், கேளிக்கை வரி ஈடு செய்யும் நிதியில் ஒரு பணி 6 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் நிறைவேற்றப்பட்டன.

2009-10ம் ஆண்டில் 12வது நிதிக்குழு பரிந்துரை திட்டத்தில் 4 பணிகள் 24 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், கல்வி நிதியில் ஒரு பணி 4 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், எம்.எல்.ஏ.தொகுதி மேம்பாட்டு நிதியில் 18 பணிகள் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், எம்.பி.தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒரு பணி 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், நகர்புற கூலி வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒரு பணி 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், நகராட்சி நிதியில் 15 பணிகள் 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பகுதி 2 திட்டத்தில் 3 பணிகள் 20 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் நிறைவேற்றப்பட்டன.

கடந்த 4 ஆண்டுகளில் தென்காசி நகராட்சி பகுதியில் மொத்தம் 176 பணிகள் 5 கோடியே 60 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு நகராட்சி தலைவர் கோமதிநாயகம் அறிக்கையில் கூறியுள்ளார்.