Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெங்களூரில் புதுப்பிக்கப்பட்ட ஏரிகள் விரைவில் திறப்பு

Print PDF

தினகரன் 09.09.2010

பெங்களூரில் புதுப்பிக்கப்பட்ட ஏரிகள் விரைவில் திறப்பு

பெங்களூர், செப். 9: பெங்களூர்மாநகரில் இருக்கும் ஏரிகள் அனைத்தும் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதில் பெரும்பாலான ஏரிகள் தூர் நிரம்பியும், துர்நாற்றமுடன் இருந்தது. ஏரிகளை புனரமைத்து நிர்வாகம் செய்யும் பொறு ப்பை கடந்தாண்டு பெங்களூர் பெருநகர் வளர்ச்சி குழுமத்திடம் மாநகராட்சி ஒப்படைத்தது.

இதில் சர் எம்.விஷ்வேஷ்வரய்யா நகரில் உள்ள உல்லாள் ஏரி, மல்லத்தள்ளி ஏரி, கொம்மகட்டா ஏரி, ராமசந்திர ஏரி, பனசங்கரி 6வது ஸ்டேஜில் உள்ள தலகட்டபுரா ஏரி, கோனனசந்திரா ஏரி, சோம்புரா ஏரி, அஏசனபுராவில் உள்ள கொத்தனூர் ஏரி, அர்காவதி லே அவுட்டில் உள்ள ஜக்கூர் ஏரி, சம்பிகே ஏரி, ராஜேனஹள்ளி ஏரி, வெங்கடேசபுரா ஏரி, தொட்டபிதரே கல்லு, மாதாவர ஆகிய ஏரிகளை புனரமைக்கும் பொறுப்பை பி.டி.. எடுத்து கொண்டது.

முதல் கட்டமாக ரூ104.61 கோடி செலவில் 8 ஏரிகளை மேம்படுத்தும் பணியை பி.டி.. தொடங்கியது. இதில் உல்லாள் ஏரியை ரூ4.49 கோடியிலும், மல்லத்தள்ளி ஏரியை ரூ22.95 கோடியிலும், கொம்மகட்டா ஏரியை ரூ6.44

கோடியிலும், ராமசந்திரா ஏரியை ரூ13.40 கோடியிலும், தலகட்டபுரா ஏரியை ரூ2.40 கோடியிலும், கோனசந்திரா ஏரியை ரூ6.10கோடியிலும், சோம்புரா ஏரியை ரூ3.85கோடியிலும், கொத்தனூர் ஏரியை ரூ3.60 கோடியிலும், சம்பிகே ஏரியை ரூ21.91கோடியிலும், ராஜேனஹள்ளி ஏரியை ரூ9 கோடியிலும், வெங்கடேசபுரா ஏரியை ரூ47 லட்சம் செலவு செய்து புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் குண்டும், குழியுமாக சிலரின் ஆக்ரமிப் பிலும் மேற்கண்ட ஏரிகள் இருந்தது. தற்போது பி.டி.. வின் கை வண்ணத்தில் 8 ஏரிகள் தூர் வாரப்பட்டும், வண்ண வண்ண மலர் செடிகளில் நந்தவனமாக்கப்படும் பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் வகையில் பிரமிக்க வைக்கிறது. தற்போது புனரமைப்பு பணிகள் 80 சதவீதம் முடிந்துள்ளது. இன்னும் 10 நாட்களில் முழுமையாக பணி முடிந்து மக்கள் கண்டு ரசிக்கும் அழகிய சுற்றுலா இடமாக காட்சியளிக்க உள்ளது.