தினகரன் 17.09.2010
முக்கூடல் பகுதியில் ரூ.9.50 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்
முக்கூடல்:முக்கூடல் டவுன் பஞ்.,பகுதியில் எம்.எல்.ஏ., நிதி 9.50 லட்சம் செலவில் வளர்ச்சி பணிகள் நடைபெறுகிறது.முக்கூடல் டவுன் பஞ்., 3வது வார்டில் ரூ.1 லட்சம் செலவில் சிமென்ட் சாலை, 4வது வார்டில் பயணிகள் நிழற்குடை ரூ.1 லட்சம் செலவிலும், 7வது வார்டில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கலையரங்கமும், 8வது வார்டில் ரூ.1 லட்சம் செலவில் சிமென்ட் சாலையும், 10,12வது வார்டுகளில் ரூ.2 லட்சம் செலவில் சிமென்ட் சாலையும், 15வது வார்டில் ரூ.1 லட்சம் செலவில் வாறுகால் பணியும், 14வது வார்டில் இணைப்பு பாலம், சிமென்ட் சாலை ரூ.2 லட்சம் செலவிலும் வளர்ச்சி பணிகள் எம்.எல்.ஏ., நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.இத்தகவலை வேல்துரை எம்.எல்.ஏ.,மற்றும் முக்கூடல் டவுன் பஞ்., தலைவர் லட்சுமணன் தெரிவித்தனர்.