Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தினமணி செய்திக்கு ஆட்சியர் பதில்

Print PDF

தினமணி 17.09.2010

தினமணி செய்திக்கு ஆட்சியர் பதில்

சிதம்பரம், செப்.16: சிதம்பரம் நகர மேம்பாட்டுக்காக அறிவித்த திட்டங்கள் காற்றில் பறந்துவிடும் என்ற அச்சம் தேவையில்லை என கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.

சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாலங்கள் திறப்பு விழாவில், "சிதம்பரம் நகர மேம்பாட்டுத் திட்டங்கள் - காற்றில் பறக்கவிடப்பட்ட ஆட்சியரின் அறிவிப்பு' என தினமணியில் வந்த செய்திக்கு பதில் அளித்து அவர் பேசியது: சிதம்பரம் நகரை சுற்றுலா நகரமாக மாற்றுவதற்கும் போக்குவரத்து இடையூறின்றி மக்கள் நடமாடுவதற்கு 4 வீதிகளில் நடைபாதை கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

மேலும் 343 லட்சம் செலவில் 4 வீதிகளின் சாலையை அகலப்படுத்தும் பணிக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இன்னும் 10 நாள்களில் வீதிகளை அகலப்படுத்தும் பணி தொடங்கும்.

இத் திட்டங்கள் காற்றில் பறந்துவிடும் என்ற அச்சம் வேண்டாம். ரயில்வே மேம்பாலத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம் 18 லட்சம் செலவில் மின்விளக்குகள் அமைக்க கடந்த மாதம் அனுமதி வழங்கப்பட்டு தற்போது டெண்டர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் மின்விளக்குகள் அமைக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.