Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பேரூராட்சியில் தீர்மானம் மாங்காடு பகுதியில் ரூ1.20கோடியில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினகரன் 21.09.2010

பேரூராட்சியில் தீர்மானம் மாங்காடு பகுதியில் ரூ1.20கோடியில் வளர்ச்சிப் பணிகள்

பூந்தமல்லி, செப் 21: புவி வெப்பமயமாவதை தடு க்கும் வகையில் தெரு க்களில் சிஎப்எல் பல்புகள் பொருத்துவது உட்பட ரூ1 கோடியே 20 லட்சம் செலவில் வளர்ச்சிப் பணிகள் செய்ய மாங்காடு பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாங்காடு பேரூராட்சி கூட்டம், அதன் தலைவர் சீனிவாசன் தலைமையில் நேற்று நடந்தது. துணைத் தலைவர் ஜபருல்லா முன்னிலை வகித்தார்.

எல்லா வார்டுகளிலும் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க தலா ரூ2லட்சம் ஒதுக்கீடு செய்தல், சிவானந்தா நகர், மீனாட்சி நகர் உட்பட 5 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுதல், புவி வெப்ப மயமாவதை தடுக்கும் வகையில், எல்லா தெருக்களிலும் சிஎப்எல் பல்புகள் பொருத்துதல், நூலகம் அமைத்தல், அங்கன்வாடி கட்டிடம் கட்டுதல், சிமென்ட் சாலைகள் அமைத்தல் உட்பட ரூ1 கோடியே 20 லட்சம் செலவில் வளர்ச்சிப் பணிகள் செய்ய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயல் அலுவலர் மகராஜன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.