Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதுவயலில் ரூ 4 கோடியில் வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்றம்

Print PDF

தினமணி 05.10.2010

புதுவயலில் ரூ 4 கோடியில் வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்றம்

காரைக்குடி, அக். 4: சிவகங்கை மாவட்டம், புதுவயல் பேரூராட்சிப் பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ 4 கோடியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று, தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் தெரிவித்தார்.

புதுவயலில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் ரூ 40 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பஸ் நிலையத்தை திறந்துவைத்தும், புதுவயல் பேரூராட்சிக்கு உள்பட்ட 2,255 பயனாளிகளுக்கு தமிழக அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கியும் அமைச்சர் பெரியகருப்பன் பேசியது:

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 1 கோடியே 86 லட்சம் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

புதுவயலில் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ 4 கோடியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்திய அளவில் கல்வியில் தமிழகம் முன்னேறும் வகையில் இந்த அரசு பாடுபட்டு வருகிறது. தொழில் வளர்ச்சியில் 4 ஆண்டுகளில் ரூ 25 ஆயிரம் கோடிக்கு அன்னிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. அரசுத் துறையில் 4 லட்சம், தனியார் துறையில் 3 லட்சம் என 7 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்தவர் தமிழக முதல்வர். மக்கள் பணியில் தொய்வின்றி தொடர்ந்து சேவை செய்வதே இந்த அரசின் நோக்கம் என்றார் அமைச்சர். மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) வேம்புலிங்கம் தலைமை வகித்தார். காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் என். சுந்தரம் முன்னிலை வகித்தார்.