Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருப்பத்தூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த அமைச்சரிடம் வலியுறுத்தல்

Print PDF

தினமணி 06.10.2010

திருப்பத்தூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த அமைச்சரிடம் வலியுறுத்தல்

திருப்பத்தூர்,​​ அக்.​ 5:​ தேர்வுநிலைப் பேரூராட்சியாக இருக்கும் திருப்பத்தூரை நகராட்சி அந்தஸ்துக்கு உயர்த்தித் தர வேண்டும் என பேரூராட்சித் தலைவர் என்.எம்.சாக்ளா ​ என்று அமைச்சரைக் கேட்டுக் கொண்டார்.​ ​

திருப்பத்தூர் பேரூராட்சியில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.​ அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை வகித்தார்.​ பேரூராட்சி மன்றத் தலைவர் என்.எம்.சாக்ளா,​​ துணைத் தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர்.​ அனைவரையும் செயல் அலுவலர் அமானுல்லா வரவேற்றார்.

இதில் கவுன்சிலர்கள் முருகானந்தம்,​​ சுப்புலெட்சுமி,​​ பதிகண்ணன்,​​ நாகராஜன்,​​ சோமசுந்தரம்,​​ கவிதாகுமார்,​​ ஜிம்கண்ணன்,​​ ரஹமத்துல்லா,​​ யாசின்,​​ காளிமுத்து,​​ சரவணப்பெருமாள் ஆகியோர் தங்கள் வார்டுகளில் உள்ள நிறைகுறைகள் பற்றி அமைச்சரிடம் கலந்தாய்வு மேற்கொண்டனர்.

திருப்பத்தூர் பேரூராட்சிக்கு அளிக்கப்பட்டுள்ள பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து அவர் பேசினார்.​ மீண்டும் அனைத்து வார்டுகளுக்கும் சாலைகள்,​​ மின் விளக்கு,​​ கழிவுநீர் துப்புரவுப் பணிகள் முதலியன சரிசெய்யப்படும் என்றும்,​​ 1-வது வார்டுக்கு பேருந்து நிழற்குடை அமைக்க உத்தரவிட்டும்,​​ 17-வது வார்டுக்கு உள்பட்ட காமராஜர் காலனியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சமுதாயக் கூடம் அமைக்க தனது சொந்த நிதியில் ரூ. 2 லட்சம் வழங்கினார்.​ ​தொடர்ந்து பேரூராட்சித் தலைவர் என்.எம்.சாக்ளா,​​ தேர்வுநிலைப் பேரூராட்சியாக இருக்கும் திருப்பத்தூரை நகராட்சி அந்தஸ்துக்கு உயர்த்தித் தர வேண்டும் என்று அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார்.​ ​ ​

அதேபோல் அனைத்து வார்டு கவுன்சிலர்களிடமும் கலந்தாய்வு மேற்கொண்டு குறைகளை சரிசெய்ய அந்தந்த துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.​ ​

இந்தக் கூட்டத்தை 4 பெண் கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.​ இதில் துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர்,​​ மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன்,​​ முருகேசன்,​​ மின் துறை அதிகாரிகள்,​​ பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.​ துணைத் தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Last Updated on Wednesday, 06 October 2010 11:21