Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

Print PDF

தினமணி 06.10.2010

வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

பெரம்பலூர்,​​ அக்.​ 5:​ பெரம்பலூரில் அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளையும் விரைந்து முடிக்க மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆ.​ ராசா திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

​ ​ பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம்,​​ ரூ.​ 3.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள உணவருந்தும் கூடத்தைத் தொடக்கி வைத்து,​​ சிறப்பு சாலைத் திட்டத்தின் கீழ்,​​ ரூ.​ 3 கோடியில் தார்ச் சாலை அமைப்பதற்கான நிர்வாக அனுமதிச் சான்றிதழை அளித்த அமைச்சர் ராசா,​​ அப்பகுதியை பார்வையிட்டு,​​ தெப்பக்குளம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி,​​ ​ தரமான நடைபாதை அமைக்கவும்,​​ பெரம்பலூர் நகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும்,​​ புதை சாக்கடைத் திட்டப்பணிகள் உள்ளிட்ட அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளையும் விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.​ ​

​ ​ பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ம.​ ராஜ்குமார்,​​ நகராட்சித் தலைவர் எம்.என்.​ ராஜா,​​ துணைத் தலைவர் கி.​ முகுந்தன்,​​ நகராட்சி ஆணையர் ​(பொ)​ கருணாகரன்,​​ அரசு வழக்குரைஞர் என்.​ ராஜேந்திரன்,​​ நகர்மன்ற உறுப்பினர்கள் ஏ.​ அப்துல்பாரூக்,​​ கே.ஜி.​ மாரிக்கண்ணன்,​​ கி.​ கனகராஜ்,​​ என்.​ ஜயக்குமார்,​​ ஜே.எஸ்.ஆர்.​ கருணாநிதி,​​ எம்.​ ரஹமத்துல்லா,​​ எஸ்.​ சிவக்குமார்,​​ ஆர்.​ ஈஸ்வரி,​​ கே.புவனேஸ்வரி,​​ பொற்கொடி ஞானசேகரன்,​​ பி.​ கண்ணகி,​​ நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பன்னீர்செல்வம்,​​ பணி மேற்பார்வையாளர்கள் ராகவன்,​​ மோகன்,​​ கோபி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.