Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தினகரன் 11வது வார்டில் வளர்ச்சி பணிகளை விரைவுபடுத்துங்கள்

Print PDF

தினகரன்               01.11.2010

11வது வார்டில் வளர்ச்சி பணிகளை விரைவுபடுத்துங்கள்

அரியலூர், நவ. 1: அரியலூர் நகராட்சி செயல் அலுவலர் சமயசந்திரனிடம் 11வது வார்டு உறுப்பினர் சிவ ஞானம் கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில் கூறியதாவது:

பெரிய தெரு மக்களுக்கு கழிவறை வசதி செய்து தர கடந்த மாதம் ரூ3 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டது. தொகை குறைவாக உள்ளதால் யாரும் டெண் டர் எடுக்கவில்லை. சமுதாயக்கூடம் 1 எச்.எஸ்.டி.பி. திட்டத்தின் கீழ்

ரூ20 லட் சத்து 20 ஆயிரம் டெண்டர் விடப்பட்டும் டெண்டரை யாரும் எடுக்கவில்லை. பெரியதெரு சுடுகாடு செல்லும் பாதையில் பாலம் கட்ட 4 ஆண்டுக்கு முன் டெண்டர் விடப்பட்டு போதிய தொகை ஒதுக்கீடு செய்யப்படாததால் ஒப்பந்ததாரர் வேலையை துவங்கவில்லை.

பெரியதெரு, மின்நகர் பகுதிகளுக்கு எச்.எஸ்.டி.பி. திட்டத்தின் கீழ் பூங்கா, வடி கால், தார்சாலை, சிமென்ட் சாலைகள் டெண்டர் விடப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்று வரை பணிகள் ஆரம்பிக்கவில்லை. பெரியதெரு, மின்நகர் பகுதிகளில் எச்.எஸ்.டி.பி. திட்டத்தின் கீழ் மின்விளக்கு வசதி செய்ய மின் அலுவலகத்திற்கு பணம் கட்டியும் பணிகள் மந்தமாக நடக்கிறது.

மழைக்காலம் நெருங்குவதால் ரோடு, பாலம் மற்றும் வடிகால் வசதி இல்லாமல் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து கொள்வதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மேற்கண்ட பணிகளுக்கு மறுமதிப்பீடு செய்து டெண்டர் விட்டு பணிகள் விரைந்து நடை பெற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.