Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கயத்தாறு டவுன் பஞ்.,ல் ரூ.2 கோடிக்கு வளர்ச்சி பணிகள் துவக்கம்

Print PDF

தினமலர்                    02.11.2010

கயத்தாறு டவுன் பஞ்.,ல் ரூ.2 கோடிக்கு வளர்ச்சி பணிகள் துவக்கம்

கயத்தாறு : கயத்தாறு டவுன் பஞ்.,பகுதியில் ரூ.2 கோடிக்கு வளர்ச்சி பணிகள் துவக்கப்பட்டுள்ளது.

கயத்தாறு முதல்நிலை டவுன் பஞ்.,ல் பல்வேறு திட்டப்பணிகள் மற்றும் டவுன் பொதுநிதி வேலைகள் ரூ.2 கோடி அளவில் நடந்து வருகிறது. கயத்தாறு டவுனுக்கு இந்த நிதியாண்டில் மத்திய அரசு நிதி உதவி திட்டமான சுவர்ண ஜெயந்தி சகாலி யோஜனா நகர்ப்புற கூலி வேலைவாய்ப்பு திட்ட நிதி ஒதுக்கீடு 16 லட்சத்திலும், பதிமூன்றாவது நிதிக்குழு நிதி ஒதுக்கீட்டில் 8.5 லட்சத்திலும், நபார்டு திட்டத்தில் 23 லட்சத்திபணிகள் நடந்து வருகிறது.

மேலும் எம்பி., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் 4 லட்சத்திலும், மாநில அரசு நிதி ஒதுக்கீடு அனைத்து டவுன் பஞ்.,அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 50 லட்சத்திலும், பகுதி 2ம் திட்டத்தில் 15 லட்சத்திலும், சிறப்பு சாலைகள் திட்டத்தில் 25 லட்சத்திலும், கேளிக்கை வரி மானியத்தில் 5 லட்சத்திலும், டவுன் பஞ்.,பொதுநிதி பங்களிப்பில் 50 லட்சத்திலும் ஆக 2 கோடி அளவில் திட்டப்பணிகள் நடந்து வருகிறது.

கயத்தாறு டவுன் பஞ்.,பகுதிகளில் சாலைகள், வடிகால்கள், தெரு மின்விளக்குகள், பயணிகள் நிழற்குடை, பஸ் நிலைய மேம்பாடு, சந்தை மேம்பாடு, சமுதாய கூடம் கட்டுதல், சுடுகாடு மேம்பாடு மற்றும் மழைநீர் சேகரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

மேலும் கயத்தாறு டவுன் பஞ்., பொதுமக்கள் மழைக்காலமாக இருப்பதால் குடிநீரை காய்ச்சி பருக வேண்டுமென்றும், உணவு அருந்தும் முன்பும், பின்பும் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டுமென பஞ்.,தலைவர் இஸ்மாயில் முகைதீன் கேட்டுக் கொண்டுள்ளார்.