Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.16 கோடியில் வளர்ச்சி பணி; தலைவர் பெருமிதம்

Print PDF

தினமலர்              30.11.2010

ரூ.16 கோடியில் வளர்ச்சி பணி; தலைவர் பெருமிதம்

திருப்பூர்:""கடந்த நான்கு ஆண்டுகளில், 15 வேலம்பாளையம் நகராட்சி பகுதியில் 13 திட்டங்களின் கீழ், ரூ.16.42 கோடி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன,'' என நகராட்சி தலைவர் மணி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: கடந்த 2006-07ம் ஆண்டில், 12வது நிதிக்குழு திட்டத்தில் மூன்று பணிகள், 15.36 லட்சம் மதிப்பிலும், இதே திட்டத்தில் 2007-08ல், ஐந்து பணிகளுக்கு 22.53 லட்சம், அடுத்த ஆண்டில் ஐந்து பணிகளுக்கு 21.14 லட்சம் என மொத்தம் 80.17 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடந்துள்ளன. கடந்த 2007-08ம் மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ், 4.25 லட்சம் ஒதுக்கப்பட்டு மூன்று பணிகள் செய்து முடிக்கப்பட்டன. அடுத்த ஆண்டில், இதே திட்டத்தில் நான்கு பணிகளுக்கு 6.55 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதே ஆண்டில் மாநில உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் தலா ஒரு பணி மேற்கொள்ளப்பட்டது. கேளிக்கை வரி சமன்பாட்டு திட்ட நிதியின் கீழ் 2008-09ல் 16 லட்சம் மதிப்பில், ஏழு பணிகள் செய்யப்பட்டுள்ளன. மழை பொழிவு காரணமாக, தாழ்வான பகுதிகளை சீரமைக்க வெள்ள நிவாரண நிதியாக மூன்று லட்சம் ஒதுக்கப்பட்டு, சாலைகள்சீரமைக்கப்பட்டுள்ளன. எம்.எல்.., நிதி மொத்தம் 45.60 லட்சம். இதன்படி, கடந்த 2007-08ம் ஆண்டில் எம்.எல்.., தொகுதி வளர்ச்சி நிதியில் ஐந்து லட்சம், அடுத்தடுத்த ஆண்டுகளில் மொத்தம் ஒன்பது பணிகளுக்கு முறையே 9.60 லட்சம், 21 லட்சம், 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இத்தொகையை கொண்டு நகராட்சியின் குறிப்பிட்ட வார்டுகளில் ரேஷன் கடை, அங்கன்வாடி மையம் உள்ளிட்ட நலத்திட்ட பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. புதிதாக திறக்கப்பட்ட ரேஷன் கடைக்கு பொருட்கள் வினியோகம், பழைய கடைகளில் இருந்து கார்டுகளை பிரிக்கும் பணி சீரான வேகத்தில் நடந்து வருகின்றன. ஒதுக்கப்பட்ட மொத்த எம்.பி., நிதி 31.01 லட்சம். 2006-07ம் ஆண்டுக்கு 1.92 லட்சம், 2007-08ம் ஆண்டுக்கு 19.49 லட்சம், அடுத்த ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட 9.60 லட்சமும் அடங்கும். கடந்த 2006 முதல் 2010 வரை நான்கு ஆண்டுகளாக நகராட்சியின் பொது நிதியாக ஒன்பது கோடியே 70 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதில், மொத்தம் 297 பணிகளுக்கு திட்டமிடப்பட்டது. நடப்பாண்டில் 19 பணிகளுக்கு திட்டம் வகுக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. தமிழக அரசின் சிறப்பு சாலைகள் திட்டத்தில் நமது நகராட்சிக்கு ரூ.303 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. நான்கு ஆண்டுகளில் மேற்கண்ட 13 திட்டங்களின் கீழ், 16.42 கோடி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு, நகராட்சி தலைவர் மணி தெரிவித்தார்.