Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ7 கோடி செலவில் அமைப்பு வேளச்சேரி ஏரியில் படகு குழாம்

Print PDF

தினகரன்               10.12.2010

ரூ7 கோடி செலவில் அமைப்பு வேளச்சேரி ஏரியில் படகு குழாம்

சென்னை, டிச.10: வேளச்சேரி ஏரியை சீரமைப்பதற்காக மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். பின்னர், மேயர் கூறியதாவது:

வேளச்சேரி ஏரியை அழகுபடுத்தி சுற்றுலா தலமாக உருவாக்குவதற்காக துணை முதல்வர் மு..ஸ்டாலின், மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். அதன்படி, இந்த ஏரியை அழகுபடுத்த தனியார் துறையிடம் ஆலோசனை பெறப்பட்டுள்ளது. வேளச்சேரி ஏரி 55 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. அதில் 6 ஏக்கரில் குடியிருப்புகள் உள்ளன. அதனை தவிர்த்து 49 ஏக்கரில் ஏரியை து£ய்மைப்படுத்தி, அழகுபடுத்தப்படும். ஏரிக்கரையில் நடைபாதை, பூங்கா, இருக்கைகள், வாகனம் நிறுத்து இடம் ஆகியவை அமைக்கப்படும். இதுதவிர சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் படகு குழாம் அமைக்கப்படும். ஏரிக்கரையை ஒட்டியுள்ள சாலையும் அகலப்படுத்தப்படும்.

மேலும், சென்னை குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ராம் நகர், அரசு குடியிருப்பு பகுதிகளிலிருந்து கழிவு நீர் வேளச்சேரி ஏரியில் கலக்கிறது. இதை தடுக்க கழிவு நீர் ஏற்று நிலையம் ரூ2 கோடி செலவில் அமைக்கப்படும். ஆக

ரூ7 கோடி செலவில் சென்னை மாநகரின் படகு குழாமுடன் கூடிய சுற்றுலா மையமாக வேளச்சேரி ஏரி விளங்கும். விரைவில் திட்ட மதிப்பீடுகள் தயாரித்து, ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, பணி தொடங்கப்படும். இவ்வாறு மேயர் கூறினார். துணை ஆணையர்(பணிகள்) தரேஸ் அகமது, மண்டலக்குழு தலைவர் மு.ஜெயராமன், தலைமைப் பொறியாளர் எம். முருகேசன், மேற்பார்வை பொறியாளர் எம்.ராமமூர்த்தி, மண்டல அதிகாரி எம். கிருஷ்ணமூர்த்தி உடன் இருந்தனர்.