Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஸ்ரீபெரும்புதூரை துணை நகரமாக மாற்றும் திட்டத்திற்கு டெண்டர் : ரூ.101.37 கோடியில் பணிகள்

Print PDF

தினமலர்                    07.08.2012

ஸ்ரீபெரும்புதூரை துணை நகரமாக மாற்றும் திட்டத்திற்கு டெண்டர் : ரூ.101.37 கோடியில் பணிகள்

ஸ்ரீபெரும்புதூர் :  ஸ்ரீபெரும்புதூரை,   சென்னைக்கு  துணை நகரமாக  மாற்றும் வகையில், 101.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம் உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த ஒப்பந்தப்புள்ளி கோரப் பட்டு உள்ளது.ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 1944ம் ஆண்டு முதல் முதல்நிலை பேரூராட்சியாக இருந்தது. தேர்வு நிலை பேரூராட்சியாக, 1968ம் ஆண்டிலிருந்து செயல்படுகிறது. தற்போது, பேரூராட்சிக்கு உட்பட்ட 19.39 சதுர கி.மீ., பரப்பளவில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.

அசுர வளர்ச்சி ஸ்ரீபெரும்புதூரை சுற்றி உள்ள சிப்காட் தொழிற்பேட்டைகளில் அமைந்துள்ள, 450 தொழிற்சாலைகளில், இரண்டு லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.இதனால், தங்கும் விடுதிகள் முளைத்து உள்ளன. தொழிலாளர்கள் பெரும்பாலானோர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தற்காலிகமாகவும், நூற்றுக்கணக்கானோர் நிரந்தரமாகவும் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.குடியிருப்புகள் அதிகரித்து உள்ளதால், குடிநீர் வழங்கல் போதுமானதாக இல்லை. புதிதாக உருவான குடியிருப்புகளில், சாலை, சாக்கடை போன்ற அடிப்படை வசதிகளும் இல்லை.இதனால், குடிநீர் ஆதாரமாக விளங்கிய நரசிங்ககுளம், இளநீர்குளம், தெப்பக்குளம் ஆகியவை கழிவுநீர் குளங்களாக மாறி விட்டன.இதை தடுக்கவும, சுகாதாரத்தை பாதுகாக்கவும், பேரூராட்சி பகுதியில் பாதாள சாக்கடை, பாதுகாக்கப் பட்ட குடிநீர், திடக்கழிவு மேலாண்மை ஆகிய திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப் பட்டது.ஐந்தில் ஒன்றுமத்திய அரசு, நாட்டில் உள்ள பேரூராட்சிகளில், ஐந்து பேரூராட்சிகளை தேர்வு செய்து, அவற்றை துணை நகரமாக மாற்ற முடிவு செய்து, அவற்றின் வளர்ச்சி திட்டங்களுக்காக, 500 கோடி ரூபாயை ஒதுக்கியது.

இவற்றில் ஒன்றாக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தேர்வு செய்யப்பட்டு, அங்கு நகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வளர்ச்சிப் பணிகள் செய்ய, கடந்த 2009ம் ஆண்டு ஒப்புதல் வழங்கப் பட்டது.இதையடுத்து, பாதாள சாக்கடை, குடிநீர் திட்டங்களை செயல்படுத்த, 101.37 கோடி ரூபாய் மதிப்பில், திட்ட வரைபடம் தயாரிக்கப் பட்டது.இதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ள நிலையில், மதிப்பீட்டில் 80 சதவீதம் மத்திய அரசு, 10 சதவீதம் மாநில அரசு, 10 சதவீதம் பேரூராட்சி வழங்கும் என, முடிவாகி உள்ளது.நிதி ஒதுக்கீடுமுதல்கட்டமாக, 10 சதவீதம் தொகையை, மத்திய அரசு வழங்கி உள்ளது. சென்னை பெருநகர் குடிநீர் வாரியம் மூலம், பணிகள் செய்ய டெண்டர் கோரி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி அளிக்க, அடுத்த மாதம் 4ம் தேதி வரை, கால அவகாசம் அளிக்கப் பட்டு உள்ளது.இது குறித்து, பேரூராட்சி செயல் அலுவலர், சம்பத் கூறுகையில்,""பேரூராட்சியில் பாதாள சாக்கடை, குடிநீர், திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் மேற்கொள்ள, அரசு ஒப்புதல் கிடைத்து உள்ளது. பாதாள சாக்கடை, குடிநீர் பணியை, சென்னை பெருநகர் குடிநீர் வாரியம் செயல்படுத்த உள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டம், பேரூராட்சி மூலம் செயல்படுத்தப் படும்,'' என்றார்.