Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிவகாசியில் ரூ1.34 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமணி                  22.08.2012

சிவகாசியில் ரூ1.34 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

சிவகாசி, ஆக. 21: சிவகாசியில் ரூ.1.34 கோடியில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற உள்ளதாக நகர்மன்றத் தலைவர் வெ.க.கதிரவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரது செய்திக் குறிப்பு:

சிவகாசி நகராட்சிப் பகுதியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2012-2013-ன் கீழ் ரூ.1.34 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற உள்ளன.21-ம் வார்டு சிவகாசி-கட்டளைப்பட்டி சாலையில் தார் சாலை அமைக்க ரூ.10 லட்சம், 26-ம் வார்டு ஜே. நகரில் தார் சாலை அமைக்க ரூ.8.50 லட்சம், 6-ம் வார்டு தமிழ் நகரில் தார் சாலை அமைக்க ரூ.4.25 லட்சம் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

11-ம் வார்டு பாரதி நகரில் பேவர் பிளாக் பதிக்க ரூ.9 லட்சம், 1-ம் வார்டு கந்தபுரம் காலனியில் பேவர் பிளாக் அமைக்க ரூ.15.90 லட்சம், 25-ம் வார்டு முண்டகன் தெருவில் பேவர் பிளாக் அமைக்க ரூ.5.30 லட்சம், 22-ம் வார்டு பேராண்டம்மாள் தெருவில் பேவர் பிளாக் அமைக்க ரூ.4.50 லட்சம், 29-ம் வார்டு குட்டியணைஞ்சான் தெருவில் பேவர் பிளாக் அமைக்க ரூ.6.80 லட்சம், 19-ம் வார்டு முஸ்லிம் வடக்குத் தெருவில் பேவர் பிளாக் அமைக்க ரூ.4 லட்சம், 10-ம் வார்டு சாமிபுரம் காலனியில் பேவர் பிளாக் அமைக்க ரூ.5.20 லட்சம், 8-ம் வார்டு பி.கே.எஸ்.ஏ.ஆறுமுகம் சாலையில் பேவர் பிளாக் அமைக்க ரூ.5.30 லட்சம், 2-ம் வார்டு அண்ணா காலனி குறுக்குத் தெருவில் பேவர் பிளாக் அமைக்க ரூ.11 லட்சம் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

31-ம் வார்டு தெய்வானை நகரில் ரூ.14.50 லட்சம் மதிப்பில் வாறுகால் அமைக்கவும், சாத்தூர் சாலையில் வாறுகால் அமைக்க ரூ.14 லட்சம், தினசரி காய்கறி சந்தை அருகே வாறுகால் அமைக்க ரூ.10.25 லட்சம், முதலாவது வார்டு கந்தபுரம் காலனியில் வாறுகால் அமைக்க ரூ.6.25 லட்சம் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.