Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதிய நகர்ப்புற அபிவிருத்தித் திட்டம் 3 மாதங்களில் தயாராகும்

Print PDF
தினமணி                   28.02.2013

புதிய நகர்ப்புற அபிவிருத்தித் திட்டம் 3 மாதங்களில் தயாராகும்


நகர்ப்புற அபிவிருத்தித் திட்டத்தைத் திருத்தி புதிய திட்டத்தை 3 மாதங்களில் தயாரிக்க கோவை மாநகராட்சியில் புதன்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சியில் புதன்கிழமை நடந்தது. இதுகுறித்து மேயர் செ.ம. வேலுசாமி கூறியது:

பிற மாநிலங்கள், சர்வதேச அளவிலான பிற நிறுவனங்களின் போட்டியை எதிர்கொள்ளக் கூடிய இந்தச் சூழ்நிலையில், கோவை தொழிற்சாலைகளைக் காப்பாற்றுவதற்கான உத்திகளைப் பயன்படுத்தி மாநகராட்சியின் பொருளாதாரத்தைப் பெருக்கி வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.

கல்விச் சாலைகள், மருத்துவமனைகள் கோவையில் அதிகமாக உள்ளதால், பிற மாநிலங்களில் இருந்து இங்கு அதிகமானோர் வருகின்றனர். இதற்குத் தேவையான கட்டுமானங்கள், போக்குவரத்து வசதி, குடிநீர், தெருவிளக்கு ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும்.

இவற்றை மேம்படுத்தும் வகையில் நகர அபிவிருத்தித் திட்டத்தை வடிவமைக்க வேண்டும். நீர்நிலைகளை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது என்றார் மேயர் செ.ம.வேலுசாமி.

ஆணையாளர் (பொறுப்பு) சு.சிவராசு, துணை மேயர் லீலாவதி உண்ணி, தன்னார்வத் தொண்டு நிறுவன நிர்வாகி பாஸ்கரன், பணிகள் குழுத் தலைவர் அம்மன் அர்ச்சுனன், நிதிக்குழுத் தலைவர் பிரபாகரன், கணக்குகள் குழுத் தலைவர் கணேசன், மாநகரப் பொறியாளர் கருணாகரன், கண்காணிப்புப் பொறியாளர் கணேஷ்வரன், தனியார் ஆலோசகர்கள் பி.ஜே.நாயுடு, மீனாட்சி ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
Last Updated on Friday, 01 March 2013 08:51