Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாதாள சாக்கடை வேலை நின்றதால் சாலை பணிகள் பாதிப்பு சென்னை மேயர் தகவல்

Print PDF

தமிழ் முரசு               19.06.2013

பாதாள சாக்கடை வேலை நின்றதால் சாலை பணிகள் பாதிப்பு சென்னை மேயர் தகவல்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

ஆலந்தூர்:சென்னை மாநகராட்சி 14வது மண்டலத்துக்கு உட்பட்ட 169 வது வார்டு பாலாஜி நகரில் 56 லட்ச ரூபாய் செலவில், பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சிறுவர் விளை யாட்டு திடல், நடை பயிற்சி மேடை மற்றும் ஸ்கேட்டிங் மைதானம் மற்றும் மக்கள் பொழுதுபோக்க இருக்கை அமைத்துள்ளனர்.பூங்கா திறப்பு விழா நேற்று மாலை நடந்தது.

விழாவுக்கு கவுன்சிலர் ஜெ.கே.ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். அமைச்சர் சின்னையா கலந்துகொண்டு பூங்காவை திறந்து வைத்தார். உயர் கோபுர மின்விளக்கை மேயர் சைதை துரைசாமி இயக்கி வைத்து,  பேசும்போது, ‘‘200 பூங்கா அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 14 வது மண்டலத்தில் 250 கோடி ரூபாய் செலவில் நவீன சாலை அமைக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் இந்த பகுதியில் சாலை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. 500 சாலைகள் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது என்றார்.

விழாவில், சிட்லபாக்கம் ராஜேந்திரன் எம்பி, கே.பி.கந்தன் எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் ராஜராம், மாவட்ட குழு உறுப்பினர் திருவேங்கடம், முன்னாள் கவுன்சிலர்கள் சிவசங்கரன், பத்மநாபன், தியாகராஜன், தனசேகர், டில்லிபாபு, ஜவகர், ரஞ்சித் குமார் கலந்துகொண்டனர்.