Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி மன்ற கூட்டம் தீர்மானம் கொசு தொல்லையை சமாளிக்க ஸீ7.5 கோடியில் வலைகள் கொள்முதல்

Print PDF

தினகரன்           27.06.2013

மாநகராட்சி மன்ற கூட்டம் தீர்மானம் கொசு தொல்லையை சமாளிக்க ஸீ7.5 கோடியில் வலைகள் கொள்முதல்

சென்னை, : கொசு தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஸீ7.5 கோடியில் 5 லட்சம் வலைகள் கொள்முதல் செய்ய மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநகராட்சி மன்ற கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் 72  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கிய தீர்மானங்கள் வருமாறு:

  • கூத்தம்பாக்கம் மற்றும் மீஞ்சூர் வல்லூரில் குப்பை பதனிடுதல் திட்டத்தை செயலாக்க தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளிகள் சரிபார்ப்பு மற்றும் மதிப்பீட்டுக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்.
  • அடையாறு மண்டலத்தில் 170 முதல் 182 வரை உள்ள கோட்டங்களில் மலேரியா பணியாளர்கள் 150 பேரை ஒப்பந்ததாரர் மூலம் பணியமர்த்த ஸீ1 கோடியே 17 லட்சத்து 4,500 நிதி ஒதுக்கப்படும்.
  • சென்னை மாநகராட்சி மன்ற தீர்மானத்தின்படி 2000ல் கேபிள் தட வாடகை தொகை கி.மீ 1க்கு ஸீ9,400ல் இருந்தது. 2013ல் கேபிள் தட வாடகை கி.மீ 1க்கு ஸீ32,450 நிர்ணயம் செய்யவும், இனி ஒவ்வொரு ஆண்டும் கேபிள் தட வாடகை 10 சதவீதம் உயர்த்தி அதன் வீதத்தில் கேபிள் டிவி விநியோகஸ்தர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க முறையான அரசின் ஒப்புதல் பெறப்படும்.
  • புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஸீ300 கோடியில் 1,10,000 தெரு விளக்கு கம்பங்கள் அமைக்கப்படும்.
  • மழைநீர் கால்வாயில் கழிவு நீர் இணைப்பு கொடுத்துள்ள வர்த்தக நிறுவன உரிமம் ரத்து செய்து சீல் வைக்கப்படும்.
  • துப்புரவு பணிகளுக்கு தேவையான 1100 லிட்டர் கொள்ளளவுடைய 2,000 குப்பை தொட்டிகள் வாங்கப்படும்.
  • கொசு தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஸீ7 கோடியே 50 லட்சம் செலவில் 5 லட்சம் கொசு வலைகள் கொள்முதல் செய்யப்படும். மேலும் நொச்சி செடிகளும் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தற்போதுள்ள 200 அம்மா உணவகங்கள், புதிதாக தொடங்கப்படவுள்ள 800 அம்மா உணவகங்கள் என ஆயிரம் உணவகங்கள் சிறப்பாக செயல்பட தனித்துறை அமைக்கப்படும்.
இத்துறையில் திட்ட இயக்குனர்&1 (கூடுதல் மாநகர சுகாதார அலுவலர் நிலை), மண்டல சுகாதார அலுவலர்&1, துப்புரவு அலுவலர்&4, நிர்வாக அலுவலர் &1, இளநிலை உதவியாளர்&19, சுகாதார ஆய்வாளர் 46, தட்டச்சர் 19, அலுவலக உதவியாளர் 20 என மொத்தம் 111 பணியிடங்கள் உருவாக்கப்படும். இதற்காக ஸீ2 கோடியே 77 லட்சத்து 90 ஆயிரத்து 578 நிதி ஒதுக்கப்படும்.

  • திட்ட இயக்குனருக்கு மாதம் ஸீ42,660, மண்டல சுகாதார அலுவலருக்கு ஸீ41,640, துப்புரவு அலுவலருக்கு ஸீ27,140 நிர்வாக அலுவலருக்கு ஸீ27,660 சம்பளம் வழங்கப்படும். சென்னை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச சானிடரி நாப்கின் 2013&14ம் ஆண்டிலும் வழங்கப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.