Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விலவூர் பேரூராட்சியில் ரூ. 28.25 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்

Print PDF

தினமணி 08.12.2009

விலவூர் பேரூராட்சியில் ரூ. 28.25 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்

தக்கலை, டிச. 7: விலவூர் பேரூராட்சியில் ரூ. 28.25 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை பத்மநாபபுரம் எம்எல்ஏ தியோடர் ரெஜினால்டு திங்கள்கிழமை தொடக்கிவைத்தார்.

பத்மநாபபுரம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து விலவூர் பேரூராட்சிக்கு அவர் ரூ. 28.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

அதன்படி 2-வது வார்டு மூலச்சல் சிஎஸ்ஐ ஆலயம் பின்புறம் சானல் கரையில் இருந்து புதுகுளம் செல்லும் சாலையில் ரூ. 4 லட்சத்திலும், 8-வது வார்டு பிலாங்காலையில் இருந்து பூஞ்சான்விளை வழியாக கொல்லன்குடிவிளை செல்லும் சாலையில் ரூ. 2 லட்சத்திலும் கான்கிரீட் தளங்கள், 9-வது வார்டு ரூ. 5 லட்சத்தில் மருதுவிளை சாலையில் வடிகால் ஓடை, சிமெண்ட் தளம், கடமலைக்குன்று அரசுத் தொடக்கப் பள்ளியில் ரூ. 8 லட்சத்தில் வகுப்பறை கட்டுதல், 1-வது வார்டு வெள்ளாளர் சமுதாயத்துக்கு ரு. 1.25 லட்சத்தில் சுடுகாடு கட்டுதல், 18-வது வார்டு அங்கன்வாடி மையத்துக்கு ரூ. 3 லட்சத்தில் சொந்த கட்டடம், 13-வது வார்டு பேரூராட்சி அலுவலகம் முதல் உம்மச்சன்விளை செல்லும் பாதையில் ரூ. 5 லட்சத்தில் கான்கிரீட் தளம் ஆகியவற்றுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து, இப் பணிகளை எம்எல்ஏ தொடக்கிவைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் விஜயகுமாரி, செயல் அலுவலர் செண்பகவள்ளி, ஜோபி, ராஜேஷ், ராபி, ஜான்கிறிஸ்டோபர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.