Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஒருங்கிணைந்த மாநகராட்சி பகுதியில் 14 பூங்காக்கள் அமைக்கத் திட்டம்

Print PDF

தினமணி 10.12.2009

ஒருங்கிணைந்த மாநகராட்சி பகுதியில் 14 பூங்காக்கள் அமைக்கத் திட்டம்

திருப்பூர், டிச.9: உள்ளாட்சி அமைப்புகளின் நிதி மற்றும் தனியார் பங்களிப்புடன் ஒருங்கிணைந்த திருப்பூர் மாநகராட்சி பகுதியில் புதியதாக 14 பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டு ள்ளது. இதற்கான முதற்கட்ட ஆய்வுப்பணியில் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

தற்போதுள்ள திருப்பூர் மாநகராட்சி 52 வார்டுகளுடன் 15வேலம்பாளையம், நல்லூர் நகராட்சிகள் மற்றும் ஆண்டிபாளையம், முருகம்பாளையம், நெருப்பெரிச்சல், செட்டி பாளையம், தொட்டிபாளையம், தொட்டியமண்ணரை, வீரபாண்டி, முத்தணம்பாளை யம் ஆகிய 8 ஊராட்சிகளும் இணைக்கப்பட்டு மாநகராட்சி விரிவுபடுத்தப்பட உள்ளன.

வேகமாக நடைபெற்று வரும் இதற்கான பணிகள் 2011க்குள் முடிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தலுக்கு பின் ஒருங்கிணைந்த மாநகராட்சியாக செயல்படுத்தப்பட உள்ளது.

இந்நி லையில், ஒருங்கிணைந்த திருப்பூர் மாநகராட்சியை அழகுபடுத்துதல் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முடிவுகள் எடுத்து நடைமுறைப்படுத்திவருகிறது.

அதன்ஒருபகுதியாக, தற்போதைய மாநகராட்சி மற்றும் மாநகராட்சியில் இணையக் கூடிய நகராட்சிகள், ஊராட்சிகளில் முதற்கட்டமாக 14 பூங்காக்கள் அமைக்க பரிசீலிக் கப்பட்டுள்ளது. அதன்படி, 15வேலம்பாளையம், நல்லூர் நகராட்சிகள் மற்றும் நெருப் பெரிச்சல் ஊராட்சியில் தலா 2 பூங்காக்களும், திருப்பூர் மாநகராட்சி மற்றும் 7 ஊராட்சிகளிலும் தலா ஒரு பூங்காக்களும் அமைக்கப்பட உள்ளன.

பொதுமக்கள் பங்களிப்புடன் இப்பூங்காக்கள் அமைப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக சம்பந்தப்பட்ட ஊராட்சிகள், நகராட்சிகளில் ஆய்வு மேற்கொண்டு நகராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் ஊராட்சி அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளனர்.இது குறித்து மாநகராட்சி ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி கூறுகையில், உள்ளாட்சி அமை ப்புகளின் நிதி மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் முதல்கட்டமாக 14 பூங்காக்கள் அ மைக்கப்பட உள்ளன. இப்பணிகள் ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அமைக்கப்படும் இப்பூங்காக்களில் முக்கியமாக இடம்பெற வேண்டிய விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் குறித்தும் உள்ளாட்சி அமைப்புக ளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து 2ம் கட்டமாக 10 பூங்காக்கள் அமை க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.