Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.1.74 கோடிக்கு நலதிட்ட உதவிகள்

Print PDF

தினகரன் 24.12.2009

ரூ.1.74 கோடிக்கு நலதிட்ட உதவிகள்

மேட்டூர்: மேட்டூர் நகராட்சி வணிக வளாகம் திறப்பு விழா, புதிய அலுவலகம் அடிக்கல் நாட்டுவிழா, இலவச கலர் டிவி மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ரூ. 1.74 கோடி மதிப்பிலான நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

மேட்டூர் நகராட்சி துவக்கப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சந்திரகுமார் தலைமை வகித் தார். டிஆர்ஓ ராஜரத்தினம் வரவேற்றார். விழா வில் வேளாண்அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கலந்து கொண்டு 5 ஆயிரத்து 75 பயனாளிகளுக்கு இலவச கலர்டிவி வழங்கினார். மேலும் நகராட்சி வணிக வளா கத்தை திறந்து வைத்து புதிய அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டினர்.

இதையடுத்து வேளாண் அமைச்சர் பேசியதாவது:
இந்த விழாவில் 5 ஆயிரத்து 179 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 74 லட்சத்து 59 ஆயிரம் மதிப் பிலான நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டுள்ளது.

மேட்டூர் வட்டத்தில் 69 ஆயிரத்து 54 நபர்களுக்கு ரூ. 16 கோடியே 14 லட்சம் மதிப்பிலான கலர்டிவிக்கள் வழங்கப்பட்டுள்ளது. 760 பேருக்கு 2 ஏக்கர் விவசாய நிலமும், 2,851 பயனாளிகளுக்கு வீட்டுமனைபட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. மேட்டூர் பகுதிக்கு மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.48 கோடியே 51 லட்சம் மதிப்பிலான நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டுள் ளது. தமிழகம் முழுவது 8 லட்சம் பெண்களுக்கு வீட்டுமனைபட்டா வழங்கப்பட்டுள்ளது.

தர்மபுரி எம்பி தாமரை செல்வனின் தாயார் மரணம் அடைந்து 10 நாட்கள் கூட ஆகவில்லை. அவர் மேட்டூர் அணை பவள விழாவில் பங்கேற்றுள்ளார். ஆனால் இந்த தொகுதியில் வெற்றி பெற்ற ஒருவர் எந்த விழாவிலும் பங்கேற்கவில்லை. சாதியின் பெயரை சொல்லி கட்சி நடத்துகின்றனர். மக்களை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. அடித்தட்டு மக்களை கைது£க்கி விடுவதற்காக தொடங்கப்பட்ட கட்சி தான் திமுக. நாங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படமாட்டோம். இவ்வாறு வேளாண் அமைச்சர் பேசினார்.

விழாவில் எம்பி தாமரைசெல்வன், வீரபாண்டி எம்எல்ஏ ராஜா, முன்னாள் எம்எல்ஏ கோபால், மேட்டூர் சேர்மன் சாந்தி, துணைதலைவர் காசிவிஸ்வநாதன், நகராட்சி கமிஷனர் கணேசன், நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளர் ரவிசந்திரன், சரவணன், பொதுகுழு உறுப்பினர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 24 December 2009 06:25