Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகர்புற மேம்பாட்டு திட்டம் ஆலோசனை குழு நியமிக்க முடிவு

Print PDF

தினமலர் 04.01.2010

நகர்புற மேம்பாட்டு திட்டம் ஆலோசனை குழு நியமிக்க முடிவு

திருச்சி: திருச்சி மாநகராட்சியில் ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்ட நிதியுதவி பெற, "நகர்புற மேம்பாட்டுத் திட்டம்' தயாரிக்க தகுதியான ஆலோசனை குழு நியமிக்கப்படவுள்ளது.

திருச்சி மாநகராட்சி ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ் மத்திய அரசிடமிருந்து நிதியுதவி பெற தகுதிபெற்றுள்ளது. இத்திட்டத்துக்கான கருத்துருவை வழங்குமாறு நகராட்சி நிர்வாகத் துறை கோரியுள்ளது.இத்திட்டத்தின் கீழ் நிதியினை பெற்று பணிகளை மேற்கொள்ளும் வகையில் நடப்பாண்டிற்கேற்ப மாநில அளவிலான கண்காணிப்புக் குழு மற்றும் மத்திய அரசு நகர்புற வளர்ச்சி அமைச்சகம் ஆகியவற்றிடம் சமர்பிப்பதுக்கு ஏதுவாக, "நகர்புற மேம்பாட்டு திட்டம்' தயாரிக்க வேண்டியுள்ளது.நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தினை தகுதியான ஆலோசனைக் குழு (கன்சல்டன்ஸி) மூலம் தயாரிக்கவும், குழு தேர்வு செய்ய விண்ணப்பம் வரவேற்கவும், அவர்களுக்கான கட்டணத் தொகைக்கும் அனுமதியளித்து கடந்த மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.