Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கொடைக்கானலை நவீனப்படுத்த ரூ.3.41 கோடியில் வளர்ச்சி பணிகள்

Print PDF

தினமலர் 08.01.2010

கொடைக்கானலை நவீனப்படுத்த ரூ.3.41 கோடியில் வளர்ச்சி பணிகள்

திண்டுக்கல் : கொடைக்கானலில் 3.41 கோடி ரூபாய் செலவில் வளர்ச்சிப்பணிகள் நடந்து வருகிறது.
மத்திய அரசு,சுற்றுலாத்துறை இணைந்து கொடைக்கானலில் சுற்றுலாவை வளர்க்க வசதியாக அடிப்படை வசதிகள் செய்ய மூன்று கோடியே 41 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள் ளன. நகராட்சி மூலம் 2 கோடியே 31 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் செலவில் குழந்தைகள் விளையாட்டு பூங்கா அமைத்தல், பிரையண்ட் பார்க் நடைபாதையில் டைல்ஸ் அமைத்தல், கழிப்பறை வசதிகளை மேம்படுத்துதல், அண்ணாசாலை நடைபாதை திடல் அமைத்தல், நியான் விளக்குகள் அமைத்தல், கம்பி தடுப்புகள் அமைத் தல் ஆகிய பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளன.

தோட்டக்கலைத்துறை மூலம் பிரையண்ட் பார்க் கில் கண்ணாடி மாளிகை அமைத்தல், ரோஜா தோட் டம் அமைத்தல், அண் ணாத்துரை சிலையை சுற்றி அல்லிதடாகம் அமைத் தல், தோட்டங்களுக்கு நீர்ப்பாசன வசதி செய்து கொடுத்தல் பணிகள் நடக்கின்றன. வனத் துறை மூலம் குப்பை தொட்டி அமைத்தல்,குடிநீர் வசதி செய்தல், அபாய இடங்களில் இரும்பு தடுப்புகள் அமைத்தல், சுற்றுச்சூழல் கையேடுகள் பயணிகளுக்கு வழங்குதல் ஆகிய பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளன.

மஞ்சளாறு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகம் மூலம் பேரிபால்ஸ் நீர்வீழ்ச்சி மேம்படுத்துதல், சிறிய நீர் வழிந்தோடிகள், பாலங் கள் அமைக்கும் பணிகள் நடக்க உள்ளன. இதற்கான நிதி ஒதுக்கீடு கிடைத் துள்ளதால் விரைவில் பணிகள் தொடங்க உள்ளது.

Last Updated on Friday, 08 January 2010 08:02