Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவையை அழகுபடுத்த ரூ. 4.15 கோடியில் திட்டம் செம்மொழி மாநாட்டையொட்டி புதுப்பொலிவு

Print PDF

தினமலர் 19.01.2010

கோவையை அழகுபடுத்த ரூ4.15 கோடியில் திட்டம் செம்மொழி மாநாட்டையொட்டி புதுப்பொலிவு

கோவை : கோவையில் நடக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி, மாநகரை அழகுப்படுத்த 4.15 கோடியில் நடைபாதைகள், பூங்கா அமைப்பது உள்ளிட்ட 20 பணிகள் துவங்கப்பட்டுள்ளன. அவிநாசி ரோடு - எல்..சி., ரோடு சந்திப்பில் நடைபாதை மற்றும் பூங்கா 25 லட்ச ரூபாயில் மேற்கொள்ளப்படும் பணியை மேயர் வெங்கடாசலம் மற்றும் மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா துவக்கி வைத்தனர். மேயர் வெங்கடாசலம் கூறியதாவது:அவிநாசி ரோடு லட்சுமிமில்ஸ் மற்றும் பாரதியார் ரோடு சந்திப்பில் நடைபாதை மற்றும் பூங்கா 30 லட்ச ரூபாயிலும், ராம் கார்டன் பகுதியில் 20 லட்சத்தில் பூங்காவும், ராமநாத புரம் பங்கஜா மில் ரோட்டில் 30 லட்சம்ரூபாயில் நடைபாதை மற்றும் பூங்காவும், அண்ணாமலை ரோட்டில் எட்டு லட்ச ரூபாயில் பூங்காவும் மைக்கப்படும். ராதிகா அவென்யூ பகுதியில் 14.60 லட்ச ரூபாயில் பூங்காவும், கோவிந்தசாமி லேஅவுட்டில் 10 லட்ச ரூபாயில் பூங்காவும், கன்னிகா அவென்யூவில் 10 லட்ச ரூபாயில் பூங்காவும் அமைக்கப்படும். நஞ்சப்பா ரோடு முதல் பாலசுப்ரமணியம் ரோடு வரை 24.90 லட்சத்தில் நடைபாதையும், 24.95 லட்சத்தில் அவிநாசிரோடு தெற்குப்பகுதி மேம்பாலம் முதல் அண்ணாசிலை வரை நடைபாதையும், அவிநாசி ரோடு, பாலசுப்ரமணியம் ரோடு சந்திப்பில் 30 லட்ச ரூபாயில் நடைபாதை மற்றும் பூங்காவும் அமைக்கப்படும்.

அவிநாசி ரோடு-எல்..சி.,ரோடு சந்திப்பில் நடைபாதை மற்றும் பூங்கா 25 லட்ச ரூபாயிலும்,அவிநாசி ரோடு உப்பிலிபாளையம் ரோடு சந்திப்பில் 25 லட்ச ரூபாயில் நடைபாதை மற்றும் பூங்கா, அவிநாசி ரோடு வ..சி., பூங்கா முன் சாலையோர பூங்கா 48 லட்சத்திலும் அமைக்கப்படும்.லட்சுமி நகரில் 19 லட்ச ரூபாயில் பூங்காவும், கணேஷ் நகரில் 11.20 லட்சத்தில் பூங்காவும் அமைக்கப்படும். வாரம்பாளையம் ரோடு, பாலசுந்தரம் ரோடு சந்திப்பில் 24.90 லட்சத்தில் நடைபாதை மற்றும் பூங்கா ரோட்டின் இரு பகுதியிலும் அமைக்கப்படும்.சத்திரோடு மற்றும் நூறடி ரோடு சந்திப்பில் நடைபாதை மற்றும் பூங்கா 24.90 லட்சத்தில் அமைக்கப்படும். போலீஸ் குடியிருப்பு பகுதியில் 17.50 லட்சத்தில் பூங்கா அமைக்கப்படும். ஒதுக்கப்பட்ட 4.15 கோடியில் நான்கு மண்டலத்திற்கும் சரியாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரலுக்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்படும்.இது தவிர ரோடுகள், போக்குவரத்து தீவுகள், பேருந்து நிழற்குடைகள், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்கப்படும் என்று மேயர் கூறினார்.

Last Updated on Tuesday, 19 January 2010 06:52