Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: கோவை மாநகராட்சியில் ரூ.4.15 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமணி 09.01.2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: கோவை மாநகராட்சியில் ரூ.4.15 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

கோவை, ஜன.18: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி கோவை மாநகராட்சியில் ரூ.4.15 கோடியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மொத்தம் 20 இடங்களில் புதிய பூங்காக்கள், நடைபாதைகள், சாலை சந்திப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்டப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இப்பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. பூமி பூஜை நிகழ்ச்சியை மேயர் ஆர்.வெங்கடாசலம் துவக்கிவைத்தார். நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா முன்னிலை வகித்தார்.

துணை மேயர் நா.கார்த்திக், ஆளும்கட்சித் தலைவர் ஆர்.எஸ்.திருமுகம், எதிர்கட்சித் தலைவர் வெ..உதயக்குமார், மண்டல தலைவர்கள் பைந்தமிழ் பாரி (தெற்கு),

வி.பி.செல்வராஜ் (மேற்கு), எஸ்.எம்.சாமி (கிழக்கு), சி.பத்மநாபன் (வடக்கு), கல்விக் குழு தலைவர் ஆர்.கல்யாணசுந்தரம், பணிகள் குழுத் தலைவர் ஆர்.ராமசாமி, சுகாதாரக் குழு தலைவர் ப.நாச்சிமுத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

திங்கள்கிழமை துவக்கப்பட்ட பணிகள் விவரம்:

கிழக்கு மண்டலம் ராம்கார்டன் பகுதியில் பூங்கா அமைத்தல், ரூ.20 லட்சம் (14-வது வார்டு), அவிநாசி சாலை லட்சுமி மில்ஸ் சந்திப்பு மற்றும் பாரதியார் சாலை சந்திப்பில் நடைபாதை, பூங்கா அமைத்தல், ரூ.30 லட்சம் (19-வது வார்டு), திருச்சி சாலை ராமநாதபுரம், பங்கஜா மில் சாலை சந்திப்பில் நடைபாதை அமைத்தல், பூங்கா அமைத்தல், ரூ.30 லட்சம் (22, 23, 24-வது வார்டுகள்).

மேற்கு மண்டலம் அண்ணாமலை சாலை பகுதியில் பூங்கா அமைத்தல், ரூ.8 லட்சம் (34-வது வார்டு), ராதிகா அவென்யூ பகுதியில் பூங்கா அமைத்தல், ரூ.14.60 லட்சம் (59-வது வார்டு).

தெற்கு மண்டலம் கோவிந்தசாமி லேஅவுட்டில் பூங்கா அமைத்தல், ரூ.10 லட்சம், கன்னிகா அவென்யூவில் பூங்கா அமைத்தல், ரூ.10 லட்சம், திருநகர் மற்றும் குறிஞ்சி கார்டன் பகுதியில் பூங்கா அமைத்தல், ரூ.10 லட்சம் (42-வது வார்டு), நஞ்சப்பா சாலை முதல் பாலசுப்பிரமணியம் சாலை வரை நடைபாதை அமைத்தல், ரூ.24.90 லட்சம், அவிநாசி சாலை தெற்கு பகுதியில் மேம்பாலம் முதல் அண்ணா சிலை வரை நடைபாதை அமைத்தல், ரூ.24.95 லட்சம், அவிநாசி சாலை-பாலசுந்தரம் சாலை சந்திப்பில் நடைபாதை, பூங்கா அமைத்தல், ரூ.30 லட்சம், அவிநாசி சாலை-எல்.ஐ.சி. சாலை சந்திப்பில் நடைபாதை, பூங்கா அமைத்தல், ரூ.25 லட்சம், அவிநாசி சாலை-உப்பிலிபாளையம் சாலை சந்திப்பில் நடைபாதை, பூங்கா அமைத்தல், ரூ.25 லட்சம், அவிநாசி சாலையில் வ.உ.சி. பூங்கா முன்பகுதியில் சாலையோர பூங்கா அமைத்தல், ரூ.48 லட்சம் (27-வது வார்டு).

லட்சுமி நகரில் பூங்கா அமைத்தல், ரூ.19 லட்சம், கணேஸ் நகரில் பூங்கா அமைத்தல் ரூ.11.20 லட்சம் (3-வது வார்டு), ஆவாரம்பாளையம் சாலை-பாலசுந்தரம் சாலை சந்திப்பில் நடைபாதை, பூங்கா அமைத்தல், ரூ.49.80 லட்சம் (18-வது வார்டு), சத்தி சாலை-நூறடிச் சாலை சந்திப்பில் நடைபாதை, பூங்கா அமைத்தல், ரூ.24.90 லட்சம், காவலர் குடியிருப்பு பகுதியில் பூங்கா அமைத்தல் ரூ.17.50 லட்சம். இப்பணிகள் அனைத்தும் ஏப்ரல் இறுதிக்குள் முடிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

Last Updated on Tuesday, 19 January 2010 11:10