Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கும்பகோணம் நகர்மன்றக் கூட்டம்: ரூ. 32 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமணி 29.01.2010

கும்பகோணம் நகர்மன்றக் கூட்டம்: ரூ. 32 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

கும்பகோணம், ஜன. 28: கும்பகோணம் நகர்மன்ற கூட்டத்தில் வியாழக்கிழமை, ரூ 30.60 லட்சத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளைச் செய்யத் தீர்மானிக்கப்பட்டது.

கும்பகோணம் நகர்மன்ற கூட்டம், தலைவர் சு.ப. தமிழழகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மூத்த நகர்மன்ற உறுப்பினர் ரா. துரை, துணைத் தலைவர் என். தர்மபாலன், நகராட்சி ஆணையர் பூங்கொடி அருமைக்கண், பொறியாளர் கனகசுப்புரத்தினம், நகரமைப்பு முதுநிலை அலுவலர் கோபாலகிருஷ்ணன்,அதிகாரிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

குடிதாங்கியிலிருந்து குடிநீர் விநியோகம் வளையப்பேட்டை,புளியஞ்சேரி, இன்னம்பூர், திருப்புறம்பியம் ஆகிய பகுதிகள் வழியாக, கும்பகோணம் நகராட்சிப் பகுதிக்கு குழாய் பதிக்கப்பட்டு, விநியோகம் செய்யப்படுகிறது.

இப்பகுதி வழியாக வரும் குழாய்கள் அவ்வப்போது ஏற்படும் மின் பிரச்னை நேரங்களில் குடிநீர் விநியோக மெயின் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் விநியோகத்துக்கு தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் அதிகளவில் வீணாகுகிறது.

எனவே அவசர, அவசியத்தை கருத்தில் கொண்டு, இப்பணிகளைச் செய்வது என்றும், கவரைத் தெருவில் பழுதடைந்துள்ள சாலைகளை ரூ. 1.70 லட்சத்தில் மேற்கொள்வது என்றும், பாணாதுறை வடக்குச் சாலையில் உள்ள வடிகால் முழுவதும் பழுடைந்துள்ளதால் ரூ. 1.50 லட்சத்தில் பணி மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.