Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெரம்பலூரில் நலத்திட்ட பணிகளை ஸ்டாலின் துவக்கி வைத்தார்

Print PDF

தினமலர் 05.02.2010

பெரம்பலூரில் நலத்திட்ட பணிகளை ஸ்டாலின் துவக்கி வைத்தார்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட பெருந்திட்டவளாகத்தில் நேற்று மாலை நடந்த அரசு விழாவில் துணை முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ 41லட்சம் மதிப்பிலான சிறுவர்பூங்கா, ரூ 2கோடியே 18லட்சம் மதிப்பிலான வேப்பூர் அரசு மருத்துவமனை கட்டடம், ரூ60லட்சம் மதிப்பிலான அரசு தொழிற்பயிற்சி கட்டடம், ரூ 70லட்சம் மதிப்பிலான மாவட்ட விளையாட்டு அரங்கம் உட்பட 115 பணிகளுக்கு ரூ. 23கோடியே 23 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார்.ரூ. 97 கோடி மதிப்பிலான மருத்துவ கல்லூரி கட்டடம், ரூ 2.50கோடி மதிப்பிலான அயன்பேரையூர் சமத்துவபுரம், ரூ. ஒரு கோடியில் மதிப்பிலான ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகம் கட்டடம், வேலூரில் ரூ. 8 கோடி மதிப்பிலான மத்திய பாலிடெக்னிக் கட்டடம் உட்பட 17 பணிகளுக்கு ரூ 112.25 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி உட்பட 15ஆயிரத்து 366 பயனாளிகளுக்கு ரூ 16.40கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மொத்தம்ரூ. 151கோடி மதிப்பிலான நலத்திட்டப்பணிகளை துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

முன்னதாக காரையில் ரூ. 2கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமத்துவபுரத்தை ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவிற்கு மாவட்ட கலெக்டர் விஜயகுமார் தலைமை வகித்து பேசினார். இதில் மத்தியதொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜா, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத்துறை அமைச்சர் நெப்போலியன், எம்எல்ஏ ராஜ்குமார், டிஆர்ஓ பழனிச்சாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் கொடியரசி, நகராட்சி தலைவர் ராஜா, யூனியன் சேர்மன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

மேலும் விழாவில் மாநில அமைச்சர் செல்வராஜ், எம்எல்ஏ சிவசங்கர், திமுக மாவட்டச் செயலாளர் துரைசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் வெங்கடாஜலம், மகாதேவி, ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, தங்கராசு, ராஜேந்திரன், யூனியன் சேர்மன் முத்துக்கண்ணு, யூனியன் துணை சேர்மன் அசோகன், குரும்பலூர் பேரூராட்சி தலைவர் ரமணி ராணி, துணை தலைவர் பச்சமுத்து, நகராட்சி துணை தலைவர் முகுந்தன், துறைமங்கலம் செல்வமோகன்,நெடுவாசல் ராமலிங்கம்,நகராட்சி கவுன்சிலர் சரவணன், ஒன்றிய கவுன்சிலர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைதிட்ட இயக்குநர் அமல்ராஜ் வரவேற்றார். நிறைவில் மகளிர் திட்ட அலுவலர் தெய்வநாயகி நன்றி கூறினார்.

Last Updated on Friday, 05 February 2010 06:58