Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெரம்பலூரில் ரூ.151 கோடியில் நலத் திட்டப் பணிகள்

Print PDF

தினமணி 05.02.2010

பெரம்பலூரில் ரூ.151 கோடியில் நலத் திட்டப் பணிகள்

பெரம்பலூர், பிப். 4: பெரம்பலூர் மாவட்டத்தில்,151 கோடியில் நலத் திட்டப் பணிகளை தொடக்கிவைத்தார் துணை முதல்வர் மு.. ஸ்டாலின்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில் வியாழகிழமை நடைபெற்ற அரசு விழாவில், துணை முதல்வர் மு.. ஸ்டாலின், ரூ. 2 கோடியே 49 லட்சத்து 40 ஆயிரத்தில் அயன்பேரையூர் கிராமத்தில் சமத்துவபுரம் அமைத்தல், ரூ. 10 லட்சத்தில் பாளையம் கிராமத்தில் கூடுதல் பள்ளிக் கட்டடம், ரூ. 97 கோடியில் மருத்துவக் கல்லூரிக் கட்டடம், ரூ. 55 லட்சத்தில் செட்டிகுளம்-நக்கசேலம் சாலை மற்றும் செங்குணம்-முருக்கன்குடி-மங்கலமேடு சாலை அமைத்தல். ரூ. 29 லட்சத்து 25 ஆயிரத்தில் என். புதூர், விஜயபுரம், மேலகாலிங்கநல்லூர் கிராமங்களில் 3 வகுப்பறைக் கட்டடங்கள், ரூ. 20 லட்சத்தில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில் வன ஓய்வு விடுதிக் கட்டடம் கட்டுதல், ரூ.1 கோடியே 81 லட்சத்து 40 ஆயிரத்தில் மேற்பார்வைப் பொறியாளர் கட்டடம், ரூ. 10 லட்சத்தில் உரக்குழிக்குச் செல்லும் தார்ச் சாலை அமைத்தல், ரூ.20 லட்சத்தில் உரக்குழிக்கு சுற்றுச்சுவர், சிமென்ட் தளம் அமைத்தல், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் ரூ. 1 கோடியில் ஒருங்கிணைந்த கூட்டுறவு கட்டடம் கட்டுதல், ரூ. 8 கோடியில், பெரம்பலூர் அருகே உள்ள வேலூர் கிராமத்தில் தொழில்நுட்பப் பயிலகக் கல்லூரிக் கட்டடம் அமைத்தல் உள்ளிட்ட 17 பணிகளுக்கு 112 கோடியே 25 லட்சத்து 5 ஆயிரத்தில் துணை முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம், காரை கிராமத்தில் ரூ. 2 கோடியே 37 லட்சத்து 43 ஆயிரத்தில் சமத்துவபுர கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகள், ரூ. 5 லட்சத்தில் சித்தளி ஊராட்சி பீல்வாடி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடை மற்றும் புஜங்கராயநல்லூர் கிராமத்தில் அங்கன்வாடிக் கட்டடம், ரூ. 12 லட்சத்தில் கொட்டரை மற்றும் அல்லிநகரம் ஊராட்சி மன்றக் கட்டடங்கள், ரூ. 16 லட்சத்தில் சமுதாயக்கூடம்,ரூ.19 லட்சத்து 10 ஆயிரத்தில் 2008-09ம் ஆண்டுக்கான நூலகக் கட்டடம், ரூ. 41 லட்சத்து 20 ஆயிரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா, ரூ.1 கோடியே 69 லட்சத்து 71 ஆயிரத்தில் பாடாலூர் மற்றும் அனுக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கழிவறை மற்றும் ஆய்வகக் கட்டடங்கள், ரூ. 81 லட்சத்தில் பிற்படுத்த்ப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கான விடுதி, கூத்தனூர் கிராமத்தில் ரூ. 16 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம், ரூ.81 லட்சத்தில் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடம், ரூ.62 லட்சத்தில் ஆரம்பச் சுகாதார நிலையம், ரூ.10 லட்சத்தில் சித்தா மற்றும் ஹோமியோபதி கட்டடம், ரூ. 12 லட்சத்து 50 ஆயிரத்தில் கிளை நூலகக் கட்டடம், ரூ. 60 லட்சத்தில் தொழில்பயிற்சிக் கட்டடம், ரூ.1 கோடியே 31 லட்சத்து 50 ஆயிரத்தில் குடிநீர் பணிகள், ரூ. 5 லட்சத்தில் பள்ளிகளுக்கு சுத்திகரிப்பு குடிநீர் வழங்கல் உள்ளிட்ட ரூ. 23 கோடியே 22 லட்சத்து 74 ஆயிரத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டடங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள் என 115 பணிகளை துணை முதல்வர் மு.. ஸ்டாலின் திறந்து வைத்து, 1,000 மகளிர் சுய உதவிக்குழு உள்ளிட்ட 15366 பயனாளிகளுக்கு ரூ.16.40 கோடியில் நலத் திட்ட உதவிகளை வழங்கினார் ஸ்டாலின்.