Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி விரிவாக்கம்: கமிஷனர் ஆலோசனை

Print PDF

தினமலர் 11.02.2010

மாநகராட்சி விரிவாக்கம்: கமிஷனர் ஆலோசனை

சென்னை : சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்வது தொடர்பாக, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளின் நிர்வாக அதிகாரிகளுடன் கமிஷனர் ராஜேஷ் லக்கானி ஆலோசனை நடத்தினார்.

சென்னை மாநகராட்சி தற்போது 174 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக உள்ளது.புறநகர் பகுதிகளில் உள்ள ஒன்பது நகராட்சிகள், எட்டு பேரூராட்சிகள் மற்றும் 25 ஊராட்சிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைத்து,428 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.வரும் 2011ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடப்பதற்கு முன்பாக, இந்த விரிவாக்கப்பணி முடித்திட வேண்டும் என்று அரசு அறிவித் துள்ளது. அதைத்தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் விரிவாக்கப் பணிக்கு தேவையான பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.மாநகராட்சி உடன் இணைய உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளின் நிர்வாக அதிகாரிகளுடன் மாநகராட்சி கமிஷனர்ராஜேஷ் லக்கானி ஆலோசனை நடத்தினார். விரிவாக்கப்படும் மாநகராட்சி உடன் இணையும் ஒன்பது நகராட்சிகளின் கமிஷனர்கள், எட்டு பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் மற்றும் 25 ஊராட்சிகளின் துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.இதில், மாநகராட்சி உடன் இணைய உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளின் விவரங்கள், மக்கள்தொகை, அரசு கட்டடங்கள், தெருக்களின் விவரம், பரப்பளவு, குப்பை சேகரிக்கும் முறை ஆகிய தகவல்களையும் அந்தந்த நகராட்சி, பேரூராட்சிகளின் வரைப்படங்கள் ஆகியவைகளை கமிஷனர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கேட்டுள்ளார்.முழு தகவல்கள் சேகரித்த பிறகு, எந்தெந்த இடங்களை இணைத்து வார்டுகள் அமைப்பது என் பது குறித்து அதிகாரிகள் முடிவெடுப்பர். விரிவாக்கப்படும் சென்னை மாநகராட்சிக்கு மொத்தம் 175 வார்டுகள் அமைக்கப்படும் என்று தெரிகிறது.