Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.20 லட்சத்தில் பல்வேறு திட்ட பணிகள்: வி.கே.புரம் பகுதியில் இன்று திறப்பு விழா

Print PDF

தினமலர் 12.02.2010

ரூ.20 லட்சத்தில் பல்வேறு திட்ட பணிகள்: வி.கே.புரம் பகுதியில் இன்று திறப்பு விழா

விக்கிரமசிங்கபுரம்:விக்கிரமசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில் சுமார் 20 லட்ச ரூபாய் செலவில் நடந்த பல்வேறு திட்ட பணிகளை சபாநாயகர் ஆவுடையப்பன் இன்று (12ம் தேதி) திறந்து வைக்கிறார்.விக்கிரமசிங்கபுரம் நகராட்சி 7வது வார்டு மேலரத வீதியில் 65 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சின்டெக்ஸ் டேங், சந்தன மாரியம்மன் கோயில் அருகில் 2 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பஸ் ஸ்டாண்ட், 5 லட்ச ரூபாய் செலவில் 10வது வார்டு குறிஞ்சி மலர் தெருவில் போடப்பட்டுள்ள சிமென்ட் சாலை, 3.75 லட்ச ரூபாய் செலவில் வடக்கு கோடைமேலழகியான் கால்வாயில் போடப்பட்டுள்ள பாலம்.

தலா 65 ஆயிரம் ரூபாய் செலவில் 9வது வார்டு பொதிகையடி மெயின்ரோடு சின்டெக்ஸ் டேங், 11வது வார்டு மேட்டுப்பாளையம் நடுத்தெரு சின்டெக்ஸ் டேங், 12வது வார்டு மணிநகரம் சின்டெக்ஸ் டேங், 14வது வார்டு பசுக்கிடைவிளை சின்டெக்ஸ் டேங் மற்றும் இதேவார்டில் மணிநகரம் சர்ச் தெருவில் 2 லட்ச ரூபாய் செலவில் போடப்பட்டுள்ள சிமென்ட் சாலை ஆகியவற்றை திறந்து வைத்தும் 3.07 லட்ச ரூபாய் செலவில் போலீஸ் ஸ்டேஷன் அருகில் பஸ் ஸ்டாண்டிற்கு அடிக்கல் நாட்டுகிறார் சபாநாயகர் ஆவுடையப்பன்.இத்தகவலை விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தலைவர் மாரியப்பன், நிர்வாக அதிகாரி முருகன் ஆகியோர் தெரிவித்தனர்.ராதாபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வாந்தி, பேதி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை எம்.எல்..,அப்பாவு சந்தித்து ஆறுதல் கூறினார்.

Last Updated on Friday, 12 February 2010 07:50