Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவை மாநகர மேம்பாட்டுக்குழுக் கூட்டம் ரூ.113 கோடி பணிகளுக்கு ஒப்புதல்

Print PDF

தினமணி 16.02.2010

கோவை மாநகர மேம்பாட்டுக்குழுக் கூட்டம் ரூ.113 கோடி பணிகளுக்கு ஒப்புதல்

கோவை, பிப்.15: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி கோவை நகரில் ரூ.113 கோடியில் பணிகள் மேற்கொள்ள கோவை மாநகர மேம்பாட்டுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இக் குழுக் கூட்டம் குழுத் தலைவரும், மேயருமான ஆர்.வெங்கடாசலம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், குழு உறுப்பினர்கள் செம்மொழி மாநாடு சிறப்பு அலுவலர் பிரபாகரன், மாநகர திமுக செயலர் நா.வீரகோபால், துணை மேயர் நா.கார்த்திக், துணை ஆணையர் வே.சாந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக் கூட்டத்தில் ரூ.113 கோடி பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் ரூ.33.34 கோடி அரசு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.25.24 கோடி மாநகராட்சி பொதுநிதியில் இருந்தும், ரூ.8 கோடி தனியார் பங்களிப்பு நிதியில் இருந்தும் செலவு செய்யப்படவுள்ளது.

ரூ.38.98 கோடி மதிப்பிலான 165 பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோர அனுமதிக்கப்பட்டது. ரூ.3.46 கோடி மதிப்பிலான 60 பணிகளுக்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் ரூ.2 கோடி மதிப்பிலான பணி விரைவில் துவக்க அனுமதிக்கப்பட்டது.

இக் கூட்டத்தில் மாநகராட்சி உதவி ஆணையர்கள் செüந்தரராஜன், கோமதிநாயகம், செயற்பொறியாளர் கணேஷ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Tuesday, 16 February 2010 06:06