Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அவிநாசி ரோட்டில் மின் விளக்கு ரூ.3 கோடியில் அமைக்க திட்டம்

Print PDF

தினமலர் 16.03.2010

அவிநாசி ரோட்டில் மின் விளக்கு ரூ.3 கோடியில் அமைக்க திட்டம்

கோவை: கோவையில் நடக்கும் செம்மொழி மாநாட்டையொட்டி, அவிநாசி ரோடு மேம்பாலத்திலிருந்து, விமானநிலையம் வரை மூன்று கோடி ரூபாய் மதிப்பில் மின் விளக்குகளை கோவை மாநகராட்சி அமைக்கிறது. அவிநாசி ரோடு மேம்பாலம், நஞ்சப்பா ரோடு சந்திப்பு இணையும் பகுதியிலிருந்து மின்விளக்கு பொருத்தும் பணியை மேயர் வெங்கடாசலம் துவக்கி வைத்தார். இந்த ரோட்டில் இருபக்கமும் வெளிச்சம் தெரியும் வகையில் ஒரு மின் கம்பத்திற்கு இரு மின்விளக்குகள் வீதம், 275 மின் கம்பங்கள் அமைக்கப்படுகிறது; இதில் 550 மின் விளக்குகள் பொருத்தப்படுகிறது.

அவிநாசிரோட்டில் உப்பிலிபாளையம், எல்..சி., அண்ணாசிலை, நவஇந்தியா, ஜி.ஆர்.ஜி., ஹோப்காலேஜ், சித்ரா ஆகிய எட்டு பகுதிகளில் 16 மீ., உயரத்திற்கு உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்படும். எட்டு விளக்குகள் 400 வாட்ஸ் திறனில் ஒளி வீசும். திருச்சி ரோட்டில், ஸ்டாக் எக்சேஞ்ச் கட்டடத்தின் முன்பிருந்து ஒண்டிப்புதூர் மேம்பாலம் வரை 5.40.கி.மீ.தூரத்திற்கு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் மின்விளக்குகள் பொருத்தப்படு கிறது. இதில் 151 மின்கம்பம் அமைக்கப்படும்;250 வாட்ஸ் திறனுள்ள 302 மின்விளக்குகள் பொருத் தப்படும். திருச்சி ரோடு சீரமைப்பு பணிகள் முடிந்த பின், மின்கம்பம் அமைக்கும் பணி நடக்கும். அவிநாசிரோட்டில் மின் விளக்குகள் பொருத்தும் பணி துவங்கியுள்ளது.

Last Updated on Tuesday, 16 March 2010 09:21