Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உளுந்தூர்பேட்டை பேரூராட்சி வளர்ச்சிக்கு ரூ. ஒரு கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமலர் 13.04.2010

உளுந்தூர்பேட்டை பேரூராட்சி வளர்ச்சிக்கு ரூ. ஒரு கோடி ஒதுக்கீடு

உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டையில் தி.மு.. அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. தி.மு.., ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு எம்.எல்.., தலைமை தாங்கினார். நகர செயலாளர் சண்முகம் வரவேற்றார். திருநாவலூர் ஒன்றிய செயலாளர் வசந்தவேல், ஒன்றிய அவைத்தலைவர் அப்துல்ரஹீம், நகர அவைத்தலைவர் சிவராஜ், முன்னாள் நகர செயலாளர் செல் லையா முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர் ஆம்பூர் தர்மன் சிறப்புரையாற்றினார். மாவட்ட பிரதிநிதி கலியமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் விஸ்வநாதன், நிர்வாகிகள் சந்திரபாபு, மதியழகன், ஸ்டாலின், டேனியல்ராஜ், தளபதிராஜா, அய்யப்பன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் எம்.எல்.., திருநாவுக்கரசு பேசியதாவது:

தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் கூறியது மட்டுமல்லாமல் நிறைய திட்டங்கள் செயல்படுத்தியுள்ளார். மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற அனைத்து வசதிகளும் தற்போது மக்களுக்கு கிடைத்து வருகிறது. உளுந்தூர் பேட்டை பேரூராட்சியில் மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு எம்.எல்.., நிதியிலிருந்து பணிகள் நடந்துள்ளது. தமிழக அரசின் பட்ஜெட்டை பார்த்து அதேபோல் பக்கத்து மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. காமராஜ் 5ம் வகுப்புவரை இலவச கல்வி கொண்டு வந்தார். கருணாநிதி முதுகலை பட்டம் வரை இலவச கல்வி கொடுக்கிறார். எனவே வரும் காலங்களில் தி.மு..வை மக்கள் ஆதரிக்க வேண்டும் என திருநாவுக்கரசு பேசினார்.

Last Updated on Tuesday, 13 April 2010 07:23