Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை மாநகராட்சிக்கு நாளை ஸ்வீடன் தொழிற்சங்கத்தினர் வருகை

Print PDF

தினமலர் 15.04.2010

நெல்லை மாநகராட்சிக்கு நாளை ஸ்வீடன் தொழிற்சங்கத்தினர் வருகை

திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சிக்கு நாளை (16ம் தேதி) ஸ்வீடன் நாட்டின் தொழிற் சங்கத்தினர் வருகின்றனர்.ஸ்வீடன் நாட்டில் நகராட்சிகளில் பணிபுரியும் தொழிலாளர் களால் நடத்தப்படும் கம்யூனல் சங்கம் ஆரம்பித்து 100 ஆண்டுகள் ஆவதையொட்டி உலகில் உள்ள பல நாடுகளுக்கு இச்சங்க நிர்வாகிகள் சென்று வருகின்றனர்.இதன் அடிப்படையில் கிறிஸ்டியானா தலைமையில் 4 மகளிர், 3 ஆண்கள் கொண்ட குழுவினர் இந்தியாவில் அசாம் மற்றும் தமிழகத்திற்கு வருகின்றனர். தமிழகத்தில் நெல்லை மாநகராட்சிக்கு நாளை (16ம் தேதி) வரும் குழுவினர் மாநகராட்சி மேயர், கவுன்சிலர்கள், அதிகாரிகள், மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆகியோரை சந்திக்கின்றனர். பாளை மண்டல அலுவலகத்தில் மண்டல தலைவர் சுப.சீத்தாராமனையும் இக்குழு சந்திக்கிறது.

நெல்லை ஜங்ஷன் ஓட்டல் ஆர்யாசில் நாளை (16ம் தேதி) மாலை கலந்துரையாடல் கூட்டம் நடக்கிறது. இதில் நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சிகள், நெல்லை, குமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள நகராட்சிகளில் பணிபுரியும் தொழிற்சங்க பிரதிநிதிகள், பப்ளிக் சர்வீஸ் இன்டர்நேஷனல் தெற்காசிய மண்டல ஒருங்கிணைப்பாளர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி பணியாளர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று நகராட்சி, மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு பொது செயலாளர் சீத்தாராமன் தெரிவித்தார்.

Last Updated on Thursday, 15 April 2010 08:53