Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இடைக்கழிநாடு பேரூராட்சியில் ரூ.34 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள்

Print PDF

தினமலர் 22.04.2010

இடைக்கழிநாடு பேரூராட்சியில் ரூ.34 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள்

செய்யூர் : இடைக்கழிநாடு பேரூராட்சியில் 34 லட்ச ரூபாய் மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.இடைக்கழிநாடு பேரூராட்சி கூட்டம், பேரூராட்சி தலைவர் விஷ்ணுவர்தன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ராஜேந்திரன், துணைத்தலைவர் அருணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் சொர்ணஜெயந்தி சகாரி ரோஜ்கார் யோஜனா திட்டத்தின் கீழ் 8வது வார்டில் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைப்பது, பனையூர் சமுதாயக்கூடம் அருகில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கூடுதல் கழிவறை கட்டுவது, பொது நிதியில் 7வது வார்டு விளம்பூர் சாலையில் ஆறு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைப்பது, நல்லூர் விநாயகர் கோவிலிலிருந்து பொன்னியம்மன் கோவில் வரை ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பைப்லைன் விஸ்தரிப்பு செய்வது, வேம்பனூர் மாரியம்மன் கோவில் சாலையில், 11 லட்ச ரூபாய் மதிப்பில் தார்ச் சாலை அமைப்பது, வேம்பனூர் திடக் கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ஒரு லட்ச ரூபாய் மதிப்பில் சுற்றுவேலி அமைப்பது, எம்.எல்.., தொகுதி மேம் பாட்டு நிதியில், இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 19வது வார்டு கெங்கதேவன்குப்பம் மேட்டுக்காலனி மாரியம்மன் கோவில் சாலையை சிமென்ட் சாலையாக மாற்றுவது, கோவைப்பாக்கம் காலனி சுடுகாடு சாலையை, மூன்று லட்ச ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலையாக மாற்றுவது, கெங்கையம்மன் கோவிலிலிருந்து பாதிரிஅம்மன் கோவில் செல்லும் வழியில் மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைப்பது, கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து பள்ளி வாசல் செல்லும் சாலையை, இரண்டு லட்ச ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலையாக மாற்றுவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Last Updated on Thursday, 22 April 2010 06:55