Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காஞ்சிபுரத்தில் ரூ.185 கோடியில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

Print PDF

தினமணி 23.04.2010

காஞ்சிபுரத்தில் ரூ.185 கோடியில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

காஞ்சிபுரம், ஏப். 22: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.185 கோடியில் உயர்மட்ட பாலங்கள், பல்வேறு சாலைகள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

÷காஞ்சிபுரம் பகுதியில் ரூ.4.11 கோடிக்கு புக்கத்துறை-உத்திரமேரூர் சாலை, பாத்தூர்-தண்டலம் சாலை உள்பட பல்வேறு இடங்களில் புதிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பாலங்கள் திறப்பு விழா மற்றும் காஞ்சிபுரம் புறவழிச் சாலை, சென்னை-பொன்னேரிக்கரை, காஞ்சிபுரம் நான்கு வழிச் சாலை ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா, பல்வேறு பாலங்கள் அடிக்கல் நாட்டு விழா உள்பட ரூ.185 கோடிக்கு பல்வேறு பணிகளுக்கான விழா நடைபெற்றது.

÷இவ் விழாவில் மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் கே.மிஸ்ரா வரவேற்றார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

÷இந் நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் பெ.விஸ்வநாதன், எம்எல்ஏக்கள் பி.கமலாம்பாள், கே.சுந்தர், காயத்ரி தேவி, டி.மூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.÷இந்நிகழ்ச்சியில் ரூ. 4.11 கோடி மதிப்பில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பாலங்கள் திறக்கப்பட்டன. ரூ.44.18 கோடியில் பல்வேறு சாலைகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மேலும் ரூ.137.29 கோடிக்கு பாலங்கள் அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.விழாவில் மஞ்சள் மயம்: இவ் விழாவில் திறக்கப்படும் கல்வெட்டுகள் மூடப்பட்ட துணி மஞ்சள் நிறத்தில் இருந்தது. மேடைக்கு பின்புறம் வைக்கப்பட்டிருந்த பதாகை, அலங்கார பூக்களில், விழா விருந்தினர்கள் அணிந்திருந்த பேட்ஜுக்கு நடுவில் என பல்வேறு இடங்களில் மஞ்சள் மயம் காணப்பட்டது.

Last Updated on Friday, 23 April 2010 10:28