Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சோமேஸ்வரர் கோயில் சீரமைப்பு பணி தீவிரம்

Print PDF

தினமணி 29.04.2010

சோமேஸ்வரர் கோயில் சீரமைப்பு பணி தீவிரம்

பெங்களூர், ஏப்.28: அல்சூர் சோமேஸ்வரர் கோயில் சீரமைப்புப் பணியை மாநகராட்சி முடுக்கிவிட்டுள்ளது.

பெங்களூரை அடுத்த அல்சூரில் உள்ள சோமேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனை அகற்றி கோயில் குளத்தைத் தூர்வார பெங்களூர் மாநகராட்சி திட்டமிட்டது. இதையடுத்து கோயில் குளத்தை தூர் வாரும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதனால் குளத்தின் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அகற்றப்பட்டன. மாலை வரை குளத்திலிருந்து 100 லாரி மண் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இரவு முழுவதும் அப்பணி தொரும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பழமை வாய்ந்த இக்கோயிலை சீரமைத்து, குளத்தை தூர் வாரினால் அது ஆட்சியாளர்களுக்கு மிகவும் நல்லதாக அமையும் என சிலர் முதல்வர் எடியூரப்பாவுக்கு ஆலோசனை வழங்கியதாக இந்தப் பகுதியில் வதந்தி உலவுகிறது.. மேலும கோயில் சீரமைப் பணியில் முன்னாள் அமைச்சர் ஷோபா கரந்த்லஜே தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது