Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பரமக்குடி நகராட்சியில் ரூ.2 கோடி பணிகள் தொடக்கம்

Print PDF

தினமணி 03.05.2010

பரமக்குடி நகராட்சியில் ரூ.2 கோடி பணிகள் தொடக்கம்

பரமக்குடி, மே 2: பரமக்குடி நகராட்சியில் ரூ.2 கோடி மதிப்பிலான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்று தலைவர் எம்.கீர்த்திகா முனியசாமி தெரிவித்தார்.

நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர நகர்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் எம்.கீர்த்திகா முனியசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் கே.கே.பாபுஜி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பாஜக உறுப்பினர் முருகன் பேசியது:

மஞ்சள்பட்டினம் சுடுகாட்டில் பிற மதத்தினர் பிரேதங்களை புதைத்துவிட்டு சிலுவையை அறைந்து அந்த இடத்தை பாவித்துக் கொள்கின்றனர். இதனால் இடப் பற்றாக்குறை ஏற்படுவதுடன் பின்பு பிரச்சனைகள் ஏற்படுவதற்கு இது வழிவகுக்கும் என்றார்.

இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியின் மற்ற நகர்மன்ற உறுப்பினர்களான சண்முகராஜ், நாகராஜன், தெய்வேந்திரன் ஆகியோர் வலியுறுத்தினர்.

நகர்மன்றத் தலைவர்: இதுவரை அதுபோன்ற அனுமதி யாருக்கும் அளிக்கப்பட வில்லை. அவர்கள் யாரேனும் இதுகுறித்து நகராட்சியில் அனுமதி கேட்டால் அவர்க ளுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரப்படும்.

அப்துல்மாலிக் (அதிமுக): நகராட்சியில் அதிகாரிகள் இல்லாததால் பணிகள் தேங்கி யுள்ளது.

நகர்மன்றத் தலைவர்: தற்போது ரூ.2 கோடி மதிப்பில் நக ராட்சியில் பல்வேறு பணிகள் தொடங்கி நடைபெறுகின்றன.

சண்முகராஜ் (பாஜக): நகரின் அனைத்துப் பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7-வது வார்டு உறுப்பினர் வசந்தி கூறுகையில், இந்த வார்டில் கழிவுநீர் செல்லும் கால்வாய் சரிசெய்யப்படாமல் நீண்ட நாள்களாக சேதமடைந்து, கழிவுநீர் சாலைகளில் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனை உடனடி சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

நகர்மன்றத் தலைவர்: இது சரி செய்யப்படும். இதனைத் தொடர்ந்து பரமக்குடி நகர் எமனேஸ்வரம் நேருஜி மைதானத்தில்

காந்திஜி சேவா சங்கம் சார்பில் காந்தி சிலை நிறுவி பராமரிப்பதை, மன்றம் மூலமாக அரசுக்குத் தெரிவிப்பது, நகராட்சிக்கு 2010-11 ஆம் ஆண்டுக்கான எழுதுபொருள்கள், ஸ்டேஷனரி பொருள்கள், மாவட்டக் கூட்டுறவு அச்சகங்களில் வாங்க ரூ.6 லட்சத்துக்கு அனுமதியளிப்பது.

நகராட்சிக்குச் சொந்தமான கடைகளின் குத்தகை காலம் முடிவடைந்தவற்றுக்கு கூடுதல் வாடகை நிர்ணயம் செய்து, உரிமதாரர்களுக்கு வாடகைக்கு விடுவது. பழுதடைந்த பணப் பெட்டகத்தை மாற்றி புதிய பணப்பெட்டகம் வாங்க ரூ 1.5 லட்சம் நிதி ஒதுக்குவது, ஆடு இறைச்சிக் கூடத்தில் வதை செய்யப்படும் ஆடுகளுக்கு ஆடு ஒன்றுக்கு ரூ.50 வசூல் செய்தல் எனவும், நகராட்சியில் 20 வார்டுகளில் நீர்த்தேக்க தொட்டிகள், குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக பொது நிதியிலிருந்து ஒதுக்குவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.