Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

வளர்ச்சி பணிகளை மார்ச் இறுதிக்குள் முடிக்க வேண்டும் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு உத்தரவு

Print PDF

தினகரன்             01.12.2010

வளர்ச்சி பணிகளை மார்ச் இறுதிக்குள் முடிக்க வேண்டும் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு உத்தரவு

மதுரை, டிச. 1: வளர்ச்சி பணிகளை மார்ச் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என மாநகராட்சி, நகராட்சி ஆணையாளர்களுக்கு நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டார்.

மதுரை மாநகராட்சி மற்றும் தென் மாவட்டங்களிலுள்ள நகராட்சி ஆணையாளர்கள் கூட்டம் மதுரையில் நடந்தது. சாலை சீரமைப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் ஆலோசனை நடத்தினார்.

அவர் கூறியதாவது: சாலைகளை சீரமைக்க அரசு சிறப்பு நிதி ஒதுக்கி உள்ளது. மழை காலம் முடிந்ததும் சாலை சீரமைப்பு பணிகளை சிறப்பாக விரைவாக முடிக்க வேண்டும். இதில் தீவிர கவனம் தேவை. வளர்ச்சி திட்ட பணிகளை 2011 மார்ச் இறுதிக்குள் முடித்து மக்கள் பயன்பெற செய்ய வேண்டும். இதில் எந்த காரணம் கொண்டும் தாமதம் ஏற்பட்டு விடக்கூடாது. குடிநீர் விநியோகம், சுகாதார பணிகள் எந்த குறைபாடும் இல்லாமல் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

மதுரை மாநகராட்சியில் நேரு நகர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் நடைபெறும் குடிசைகளை மாற்றி கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டம், பாதாள சாக்கடை பணி, மழை நீர் வடிகால் திட்டம், அவனியாபுரம், சக்கிமங்கலம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். திட்டங்களில் எந்த குறைபாடும் இருக்க கூடாது. மாநகராட்சி வரி நிர்ணயத்தில் சீரான முறையை கடைபிடித்து, வசூலிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

மாநகராட்சி ஆணையாளர் செபாஸ்டின், தலைமை பொறியாளர் சக்திவேல், நகராட்சிகளின் மதுரை மண்டல அதிகாரி அசோகன் பங்கேற்றனர்.

 

ரூ.16 கோடியில் வளர்ச்சி பணி; தலைவர் பெருமிதம்

Print PDF

தினமலர்              30.11.2010

ரூ.16 கோடியில் வளர்ச்சி பணி; தலைவர் பெருமிதம்

திருப்பூர்:""கடந்த நான்கு ஆண்டுகளில், 15 வேலம்பாளையம் நகராட்சி பகுதியில் 13 திட்டங்களின் கீழ், ரூ.16.42 கோடி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன,'' என நகராட்சி தலைவர் மணி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: கடந்த 2006-07ம் ஆண்டில், 12வது நிதிக்குழு திட்டத்தில் மூன்று பணிகள், 15.36 லட்சம் மதிப்பிலும், இதே திட்டத்தில் 2007-08ல், ஐந்து பணிகளுக்கு 22.53 லட்சம், அடுத்த ஆண்டில் ஐந்து பணிகளுக்கு 21.14 லட்சம் என மொத்தம் 80.17 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடந்துள்ளன. கடந்த 2007-08ம் மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ், 4.25 லட்சம் ஒதுக்கப்பட்டு மூன்று பணிகள் செய்து முடிக்கப்பட்டன. அடுத்த ஆண்டில், இதே திட்டத்தில் நான்கு பணிகளுக்கு 6.55 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதே ஆண்டில் மாநில உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் தலா ஒரு பணி மேற்கொள்ளப்பட்டது. கேளிக்கை வரி சமன்பாட்டு திட்ட நிதியின் கீழ் 2008-09ல் 16 லட்சம் மதிப்பில், ஏழு பணிகள் செய்யப்பட்டுள்ளன. மழை பொழிவு காரணமாக, தாழ்வான பகுதிகளை சீரமைக்க வெள்ள நிவாரண நிதியாக மூன்று லட்சம் ஒதுக்கப்பட்டு, சாலைகள்சீரமைக்கப்பட்டுள்ளன. எம்.எல்.., நிதி மொத்தம் 45.60 லட்சம். இதன்படி, கடந்த 2007-08ம் ஆண்டில் எம்.எல்.., தொகுதி வளர்ச்சி நிதியில் ஐந்து லட்சம், அடுத்தடுத்த ஆண்டுகளில் மொத்தம் ஒன்பது பணிகளுக்கு முறையே 9.60 லட்சம், 21 லட்சம், 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இத்தொகையை கொண்டு நகராட்சியின் குறிப்பிட்ட வார்டுகளில் ரேஷன் கடை, அங்கன்வாடி மையம் உள்ளிட்ட நலத்திட்ட பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. புதிதாக திறக்கப்பட்ட ரேஷன் கடைக்கு பொருட்கள் வினியோகம், பழைய கடைகளில் இருந்து கார்டுகளை பிரிக்கும் பணி சீரான வேகத்தில் நடந்து வருகின்றன. ஒதுக்கப்பட்ட மொத்த எம்.பி., நிதி 31.01 லட்சம். 2006-07ம் ஆண்டுக்கு 1.92 லட்சம், 2007-08ம் ஆண்டுக்கு 19.49 லட்சம், அடுத்த ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட 9.60 லட்சமும் அடங்கும். கடந்த 2006 முதல் 2010 வரை நான்கு ஆண்டுகளாக நகராட்சியின் பொது நிதியாக ஒன்பது கோடியே 70 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதில், மொத்தம் 297 பணிகளுக்கு திட்டமிடப்பட்டது. நடப்பாண்டில் 19 பணிகளுக்கு திட்டம் வகுக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. தமிழக அரசின் சிறப்பு சாலைகள் திட்டத்தில் நமது நகராட்சிக்கு ரூ.303 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. நான்கு ஆண்டுகளில் மேற்கண்ட 13 திட்டங்களின் கீழ், 16.42 கோடி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு, நகராட்சி தலைவர் மணி தெரிவித்தார்.

 

நல்லூரில் ரூ.12 கோடியில் வளர்ச்சி பணி

Print PDF

தினமலர்                30.11.2010

நல்லூரில் ரூ.12 கோடியில் வளர்ச்சி பணி

திருப்பூர்: சுகாதாரத்துறையில் பணிபுரியும் 58 சுகாதார பணியாளர்களை நிரந்தரம் செய்ய, நல்லூர் நகராட்சி நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது. நல்லூர் நகராட்சியில் கடந்த 2006-07ம் ஆண்டில் தார் ரோடு, வடிகால் பணி என ரூ.2.11 கோடி மதிப்பில் வளர்ச்சி பணி செய்யப்பட்டது. எம்.எல்.., தொகுதி மேம்பாட்டு நிதி, பகுதி இரண்டு திட்டத்தின் கீழ் இப்பணிகள் நடந்தன. கடந்த 2007-08ம் ஆண்டில், மயான மேம்பாடு, தார் ரோடு, திடக்கழிவு மேலாண்மை, வடிகால் பணி, இதர பணிகள் என ரூ.37.89 லட்சத்தில் பணி நடந்தது. பகுதி இரண்டு திட்டம், 12வது நிதிக்குழு மானியம், இரண்டாவது மாநில நிதிக்குழு தேர்தல் மானியம், எம்.எல்.., தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் பணிகள் நடந்தன. கடந்த 2008-09ம் ஆண்டு தார் ரோடு, குட்டை அபிவிருத்தி, வடிகால் பணி, கூடுதல் வகுப்பறை, நியாய விலை கட்டடம், கூடுதல் வகுப்பறை, தெருவிளக்குகள் அமைக்கப்பட்டன. பகுதி இரண்டு திட்டம், கேளிக்கை வரி ஈடு செய்தல் நிதி, 12வது நிதிக்குழு மானியம், எம்.எல்.., தொகுதி, எம்.பி., தொகுதி மேம்பாட்டு திட்டம் மூலம் ரூ.1.29 கோடி மதிப்புள்ள வளர்ச்சி பணிகள் நடந்துள்ளன.

2009-10ம் ஆண்டில் பகுதி இரண்டு திட்டம், 12வது நிதிக்குழு மானியம், எம்.எல்.., மற்றும் எம்.பி., நிதி மூலம் வளர்ச்சி பணி நடந்தது. தார் ரோடு, வடிகால் பணி, திடக்கழிவு மேலாண்மை, நியாய விலை கட்டடம் என ரூ.51.80 லட்சம் மதிப்பில் செய்யப்பட்டது. நடப்பு 2010-11ம் ஆண்டில் எம்.எல்.., நிதியில், 9.75 லட்சத்தில் பள்ளி கட்டடம்; 13.20 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ், நான்கு கோடியில் தார் ரோடு அமைக்கப்படுகிறது. கடந்த 2006ம் ஆண்டு முதல் 68 வளர்ச்சி பணிகள், ரூ.8.55 கோடி மதிப்பில் செய்யப்பட்டுள்ளன. நகராட்சி தலைவி விஜயலட்சுமி கூறுகையில்,""நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கூடுதலாக குடிநீர் பெறுவதற்காக, அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கூடுதல் குடிநீர் கிடைத்ததும், வாரம் ஒரு முறை சப்ளை செய்யப்படும்; புதிதாக 4,000 இணைப்புகள் வழங்கப்படும். சந்திராபுரம் குட்டைக்கு நிரந்தர தீர்வுக்கு வழி ஏற்படுத்தப்பட உள்ளது. சுகாதாரத்துறையில் பணிபுரியும் 58 சுய உதவிக்குழுவினரை நிரந்தரம் செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ராஜ்யசபா எம்.பி., நிதி, நல்லூர் நகராட்சிக்கு கிடைத்தது. விஜயாபுரம் ஒத்தக்கடை முதல் சிட்கோ வரை தார்ரோடு அமைக்க, மத்திய அமைச்சர் வாசன் மூலம் ஐந்து லட்ச ரூபாய் பெறப்பட்டது. பள்ளி கட்டடம், மேல்நிலைத்தொட்டி கட்ட 15 லட்ச ரூபாய் கேட்கப்பட்டுள்ளது,'' என்றார்.

 


Page 35 of 160