Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

மாநகராட்சியில் ரூ.187.82 கோடியில் வளர்ச்சி பணி

Print PDF

தினமலர்                30.11.2010

மாநகராட்சியில் ரூ.187.82 கோடியில் வளர்ச்சி பணி

திருப்பூர்:""திருப்பூர் மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன; சாலை பணி, வடிகால் பணி, கட்டட பணி, குடிநீர், தெருவிளக்கு, பாதாள சாக்கடை திட்டம் என 187.82 கோடி மதிப்பீட்டில் பல பணிகள் நடந்துள்ளன,'' என மேயர் செல்வராஜ் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: திருப்பூர் மாநகராட்சியில் 38.04 கோடி ரூபாயில் சாலைப்பணி, 74.95 கோடி ரூபாயில் வடிகால் பணி, 15 பள்ளி கட்டடங்கள், 28 ரேஷன் கடைகள், இரண்டு சத்துணவு கூடங்கள், நான்கு அலுவலக கட்டடங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையம் என 15.40 கோடி ரூபாயில் பணிகள் நடந்துள்ளன. ஆழ்துளை கிணறுகள், மின் மோட்டார் மற்றும் தொட்டிகள், குடிநீர் வினியோக குழாய்கள் என குடிநீர் பணிகளுக்காக 8.36 கோடி ரூபாயில் பணிகள் நடந்துள்ளன. 63 தெருவிளக்குகள், 3.75 கோடி ரூபாய்க்கு அமைக் கப்பட்டுள்ளன.

ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசை பகுதி மேம்பாட்டு திட்டத் தில் 2,060 வீடுகள், 10.63 கோடி ரூபாயில் புதிதாக கட்டப்பட்டும், பழுதடைந்த வீடுகள் புதுப்பித்து கட்டப்பட்டு வருகின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இதில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பாதாள சாக்கடை திட்டத்துக்காக 4.64 கோடி ரூபாய்; திடக்கழிவு மேலாண்மைக்காக 9.67 கோடி ரூபாய்; சிறப்பு சாலை திட்டத்தில் 21.02 கோடி ரூபாய் என 187.82 கோடி ரூபாயில், மாநகராட்சி பகுதியில் மக்களுக்கான வளர்ச்சி பணிகளும், நலத்திட்ட பணிகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளன. 40 கோடி ரூபாயில், வரன்முறைப் படுத்தப்பட்ட பகுதிகளில் சாக்கடை கால்வாய் கட்டும் பணி; குமார் நகர் மாநகராட்சி பள்ளி, ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி, பத்மாவதிபுரம் மாநகராட்சி பள்ளி, கருவம்பாளையம் மாநகராட்சி பள்ளிகளில் வகுப் பறை கட்டடங்கள், ஜெய்வாபாய் பள்ளியில் ஒரு கோடி ரூபாய் செலவில் கலையரங்கம், என பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பாறைக்குழிகளில் கொட்டப்படும் குப்பையால் பாதிப்பு ஏற்படாதபடி, துப்புரவு மற்றும் சுகாதார பணி நடக்கிறது. இவ்வாறு, மேயர் செல்வராஜ் கூறினார்.

 

வடலூர் நகரை அழகுப்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு

Print PDF

தினமலர்            30.11.2010

வடலூர் நகரை அழகுப்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு

கடலூர் : வடலூர் நகரை அழகு படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கடலூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் கடலூர்-விருத்தாசலம் சாலையின் இருபுறமும் அகலப்படுத்தவும், மண்சாலை பகுதியில் இருபுறமும் மேம்பாடு செய்யவும், வடலூர் நகரை அழகுபடுத்துவதற்காக சுகாதாரத்துறை அமைச்சரின் துரித முயற்சியில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பரிந்துரையின் படி, தமிழக அரசு சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து போக்குவரத்து துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த சாலை பணிகள் நிறைவடைந்தால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டு, போக்குவரத்து தங்குதடையின்றி நடைபெறும் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

தர்மபுரி நகராட்சியில் ரூ1.25 கோடியில் வளர்ச்சிப்பணிகள் நகரமன்ற தலைவர் தகவல்

Print PDF

தினகரன்                    30.11.2010

தர்மபுரி நகராட்சியில் ரூ1.25 கோடியில் வளர்ச்சிப்பணிகள் நகரமன்ற தலைவர் தகவல்

தர்மபுரி, நவ.30: தர்மபுரி நகராட்சி பகுதியில் ரூ1.25 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருவதாக நகரமன்ற தலைவர் தெரிவித்தார்.

தர்மபுரி நகர பேருந்து நிலையம் அருகில் தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கி வந்தது. அந்த இடத்தில் வணிக வளாகம் மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டித்தர முடிவு செய்து தர்மபுரி நகராட்சி நிர்வாகம் ரூ75 லட்சத்தில் பணிகளை தொடங்கியது. அந்த இடத்தில் இருந்த 200க்கும் மேற்பட்ட சிறு காய்கறி வியாபாரிகள் சந்தைபேட்டைக்கு மாற்றப்பட்டனர். ஆனால், அவர்கள் பேருந்து நிலையத்தை ஒட்டியே இடம் ஒதுக்கி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இருதரப்பிலும் பல்வேறு பிரச்னைகள் உருவாகியது. இதனால் கட்டிடம் கட்டும் பணி குழி தோண்டிய நிலையிலேயே முடங்கியது. இப்பிரச்னை நீதிமன்றம் வரை சென்றது. இப்போது இருவருக்கும் சாதகமான தீர்ப்பு வந்துள்ளது.

இந்நிலையில் வணிக வளாகம் மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட் கட்ட குழி தோண்டிய இடத்தில் 5 அடி ஆழத்திற்கு மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. அந்த தண்ணீரை வெளியேற்றிவிட்டு வரும் 1ம் தேதி முதல் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளதாக நகரமன்ற தலைவர் ஆனந்தகுமார் ராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது: நகரப் பேருந்து நிலையம் அருகில் கிடப்பில் கிடந்த வணிக வளாகம் மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட் பணிகள் வரும் டிசம்பர் 1ம் தேதி பூமி பூஜையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து 6 மாதத்தில் கட்டி முடிக்கப்படும். இதுபோன்று, ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகில் நகராட்சி இடத்தில் ரூ25 லட்சத்தில் வணிக வளாகம் கட்டப்படுகிறது. இப்பணி வரும் மார்ச் மாதத்தில் முடிவடையும்.

அதைதொடர்ந்து பேருந்து நிலையத்தில் ரூ25 லட்சத்தில் 16 கடைகள் கட்டப்படுகிறது. வரும் 1ம் தேதி பூமி பூஜையுடன் கட்டுமான பணி தொடங்குகிறது. தர்மபுரி நகராட்சி பகுதியில் ரூ1.25 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள்(வணிக வளாகம், கடைகள்) நடைபெற்று வருகிறது. இவ்வாறு ஆனந்தகுமார் ராஜா கூறினார்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் சிறுவர்கள் விளையாடும் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதால் சிறுவர் விளையாட முடியாத நிலை உள்ளது.

 

Last Updated on Tuesday, 30 November 2010 05:38
 


Page 36 of 160