Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

களியக்காவிளை பேரூராட்சியில் ரூ.90 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்:மன்றக் கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

தினமணி          26.11.2010

களியக்காவிளை பேரூராட்சியில் ரூ.90 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்:மன்றக் கூட்டத்தில் தீர்மானம்

களியக்காவிளை, நவ. 25:களியக்காவிளை பேரூராட்சிப் பகுதிகளில் 2010-11-ம் ஆண்டுக்கான பொதுநிதியில் ரூ.90 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள வியாழக்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் மன்றத் தலைவர் எஸ். இந்திரா தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் சலாவுதீன், வார்டு உறுப்பினர்கள் என். விஜயேந்திரன், பத்மினி, ராதா, . ராஜு, கமால், விஜயானந்தராம், ராயப்பன், சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதில் வரவுவிளை- முதுவள்ளிக்குளம் சாலையை ரூ.7.95 லட்சத்திலும், கல்யாணப்பொற்றை- உம்மறக்கல்சாலையை ரூ.6.30 லட்சத்திலும் மேம்பாடு செய்வது, பேரூராட்சி அலுவலக வளாகப்பகுதியில் உள்ள பாறையை உடைத்து சமன்படுத்தி சுற்றுச்சுவர் கட்ட ரூ.8 லட்சம் ஒதுக்குவது உள்பட ரூ.90.8 லட்சத்துக்கு பொதுநிதி மூலம் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.இதுதவிர பல்வேறு வார்டுகளில் உள்ள இணைப்புச் சாலைகள் மேம்பாடு செய்தல் உள்ளிட்ட 146 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

மாநகராட்சி விரிவாக்க தீர்மானம் நிறைவேறியது

Print PDF

தினமலர்             25.11.2010

மாநகராட்சி விரிவாக்க தீர்மானம் நிறைவேறியது

மதுரை : மதுரை மாநகராட்சியை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை, ஒரு வழியாக அரசு நிறைவேற்றி உள்ளது. மதுரைக்கு அருகில் உள்ள நகராட்சிகளான ஆனையூர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம், பேரூராட்சிகளான ஹார்விபட்டி, திருநகர், விளாங்குடி, ஊராட்சிகளான மேலமடை, உத்தங்குடி, வண்டியூர், நாகனாகுளம், கண்ணனேந்தல், திருப்பாலை, ஐராவதநல்லூர், சின்ன அனுப்பானடி, சிந்தாமணி, புதுக்குளம் பிட், தியாகராஜ காலனி ஆகியவற்றை இணைக்க திட்டமிடப்பட்டது. இதற்குரிய அரசாணை 28.9.10 அன்று வெளியிடப்பட்டது. இதையடுத்து, மாநராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

விழுப்புரம் நகராட்சி எல்லை விரிவாக்கம்

Print PDF

தினமலர்                25.11.2010

விழுப்புரம் நகராட்சி எல்லை விரிவாக்கம்

சென்னை : விழுப்புரம் நகராட்சியுடன் ஐந்து கிராம ஊராட்சிகளை இணைத்து, அதன் எல்லை விரிவாக்கப்பட உள்ளது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாக செயலர் அசோக் வரதன் ஷெட்டி பிறப்பித்த உத்தரவில், "விழுப்புரம் நகராட்சி எல்லையுடன் காகுப்பம், எருமனந்தாங்கல், பாணாம்பட்டு, சாலாமேடு, வழுதரெட்டி ஆகிய கிராம ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன. இதற்கான வார்டுகள் பிரிப்பு, அடுத்த உள்ளாட்சி தேர்தலின் போது முடிவு செய்யப்படும். இந்த இணைப்புக்கு ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகள் இருந்தால், அவற்றை துறை செயலருக்கு ஆறு வாரத்துக்குள் அனுப்பி வைக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 


Page 37 of 160