Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

ஆவடி பகுதியில் வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு

Print PDF

தினகரன்                   04.11.2010

ஆவடி பகுதியில் வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு

ஆவடி, நவ.4: ஆவடி நகராட்சி உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் விக்டரி மோகன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் அப்துல் ரகீம், ஆணையர் ராமமூர்த்தி, பொறியாளர் குருசாமி, சுகாதார அதிகாரி மோகன் முன்னிலை வகித்தனர்.

நகராட்சி தலைவர் விக்டரி மோகன் பதிலளித்து பேசியதாவது:

கோவில்பதாகை, திருமுல்லைவாயல், கோனாம்பேடு, காமராஜர்நகர் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளிகளை சீரமைக்க ரூ41 லட்சமும், சோழம்பேடு கணபதி நகர், ஆவடி ராமதாஸ் நகர், காமராஜர் நகர், பட்டாபிராம் கக்கன்ஜி நகர் பகுதியில் ரூ17.5 லட்சத்தில் மழைநீர் கால்வாய் அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பட்டாபிராம் முதல் திருமுல்லைவாயல் வரை சிடிஎச் சாலையில் மின் விளக்கு அமைக்கவும், ஆவடி&பூந்தமல்லி சாலையில் மின் விளக்கு அமைக்கவும் ரூ37 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் ரூ24.5

லட்சத்தில் பயிற்சிகூடம் கட்டப்படும். திருமுல்லைவாயல் சோழம்பேடு சாலை, மூன்று நகர், பாரதி நகர், மூர்த்தி தெரு பகுதிகளில் பழுதான சாலைகளை சீரமைக்க ரூ42 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

கயத்தாறு டவுன் பஞ்.,ல் ரூ.2 கோடிக்கு வளர்ச்சி பணிகள் துவக்கம்

Print PDF

தினமலர்                    02.11.2010

கயத்தாறு டவுன் பஞ்.,ல் ரூ.2 கோடிக்கு வளர்ச்சி பணிகள் துவக்கம்

கயத்தாறு : கயத்தாறு டவுன் பஞ்.,பகுதியில் ரூ.2 கோடிக்கு வளர்ச்சி பணிகள் துவக்கப்பட்டுள்ளது.

கயத்தாறு முதல்நிலை டவுன் பஞ்.,ல் பல்வேறு திட்டப்பணிகள் மற்றும் டவுன் பொதுநிதி வேலைகள் ரூ.2 கோடி அளவில் நடந்து வருகிறது. கயத்தாறு டவுனுக்கு இந்த நிதியாண்டில் மத்திய அரசு நிதி உதவி திட்டமான சுவர்ண ஜெயந்தி சகாலி யோஜனா நகர்ப்புற கூலி வேலைவாய்ப்பு திட்ட நிதி ஒதுக்கீடு 16 லட்சத்திலும், பதிமூன்றாவது நிதிக்குழு நிதி ஒதுக்கீட்டில் 8.5 லட்சத்திலும், நபார்டு திட்டத்தில் 23 லட்சத்திபணிகள் நடந்து வருகிறது.

மேலும் எம்பி., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் 4 லட்சத்திலும், மாநில அரசு நிதி ஒதுக்கீடு அனைத்து டவுன் பஞ்.,அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 50 லட்சத்திலும், பகுதி 2ம் திட்டத்தில் 15 லட்சத்திலும், சிறப்பு சாலைகள் திட்டத்தில் 25 லட்சத்திலும், கேளிக்கை வரி மானியத்தில் 5 லட்சத்திலும், டவுன் பஞ்.,பொதுநிதி பங்களிப்பில் 50 லட்சத்திலும் ஆக 2 கோடி அளவில் திட்டப்பணிகள் நடந்து வருகிறது.

கயத்தாறு டவுன் பஞ்.,பகுதிகளில் சாலைகள், வடிகால்கள், தெரு மின்விளக்குகள், பயணிகள் நிழற்குடை, பஸ் நிலைய மேம்பாடு, சந்தை மேம்பாடு, சமுதாய கூடம் கட்டுதல், சுடுகாடு மேம்பாடு மற்றும் மழைநீர் சேகரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

மேலும் கயத்தாறு டவுன் பஞ்., பொதுமக்கள் மழைக்காலமாக இருப்பதால் குடிநீரை காய்ச்சி பருக வேண்டுமென்றும், உணவு அருந்தும் முன்பும், பின்பும் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டுமென பஞ்.,தலைவர் இஸ்மாயில் முகைதீன் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

தினகரன் 11வது வார்டில் வளர்ச்சி பணிகளை விரைவுபடுத்துங்கள்

Print PDF

தினகரன்               01.11.2010

11வது வார்டில் வளர்ச்சி பணிகளை விரைவுபடுத்துங்கள்

அரியலூர், நவ. 1: அரியலூர் நகராட்சி செயல் அலுவலர் சமயசந்திரனிடம் 11வது வார்டு உறுப்பினர் சிவ ஞானம் கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில் கூறியதாவது:

பெரிய தெரு மக்களுக்கு கழிவறை வசதி செய்து தர கடந்த மாதம் ரூ3 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டது. தொகை குறைவாக உள்ளதால் யாரும் டெண் டர் எடுக்கவில்லை. சமுதாயக்கூடம் 1 எச்.எஸ்.டி.பி. திட்டத்தின் கீழ்

ரூ20 லட் சத்து 20 ஆயிரம் டெண்டர் விடப்பட்டும் டெண்டரை யாரும் எடுக்கவில்லை. பெரியதெரு சுடுகாடு செல்லும் பாதையில் பாலம் கட்ட 4 ஆண்டுக்கு முன் டெண்டர் விடப்பட்டு போதிய தொகை ஒதுக்கீடு செய்யப்படாததால் ஒப்பந்ததாரர் வேலையை துவங்கவில்லை.

பெரியதெரு, மின்நகர் பகுதிகளுக்கு எச்.எஸ்.டி.பி. திட்டத்தின் கீழ் பூங்கா, வடி கால், தார்சாலை, சிமென்ட் சாலைகள் டெண்டர் விடப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்று வரை பணிகள் ஆரம்பிக்கவில்லை. பெரியதெரு, மின்நகர் பகுதிகளில் எச்.எஸ்.டி.பி. திட்டத்தின் கீழ் மின்விளக்கு வசதி செய்ய மின் அலுவலகத்திற்கு பணம் கட்டியும் பணிகள் மந்தமாக நடக்கிறது.

மழைக்காலம் நெருங்குவதால் ரோடு, பாலம் மற்றும் வடிகால் வசதி இல்லாமல் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து கொள்வதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மேற்கண்ட பணிகளுக்கு மறுமதிப்பீடு செய்து டெண்டர் விட்டு பணிகள் விரைந்து நடை பெற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 


Page 39 of 160