Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ 3.35 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமணி 07.10.2010

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ 3.35 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

ஒட்டன்சத்திரம்,அக். 6: ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ 3.35 கோடி செலவிலான வளர்ச்சிப் பணிகளை, அரசு தலைமைக் கொறடா அர. சக்கரபாணி தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் முதற்கட்டமாக 1 முதல் 9 வார்டுகளுக்கு தேவையான சிமெண்ட் சாலை, கலையரங்கம், சிறுபாலம், சாக்கடை, தெரு விளக்கு உள்பட பல பணிகளுக்கான பூமிபூஜை அந்தந்த வார்டு பகுதியில், புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) எம்.பி. மூர்த்தி தலைமை வகித்தார்.

நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி கண்ணன், துணைத் தலைவர் வனிதா ஆறுமுகம், நகராட்சி உறுப்பினர்கள் ராமராஜ், ஆனந்தன், ஜின்னா, சுப்பிரமணி, சின்னம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், அரசு தலைமைக் கொறடா அர. சக்கரபாணி, வளர்ச்சிப் பணிகளை பூமிபூஜையுடன் தொடங்கி வைத்தார்.

இதில், ஒட்டன்சத்திரம் ஒன்றிய தி.மு.. செயலர் இரா. சோதிசுவரன், பொதுக்குழு உறுப்பினர்கள் வெள்ளைச்சாமி, மோகன், முன்னாள் கவுன்சிலர் பன்னீர்செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

Print PDF

தினமணி 06.10.2010

வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

பெரம்பலூர்,​​ அக்.​ 5:​ பெரம்பலூரில் அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளையும் விரைந்து முடிக்க மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆ.​ ராசா திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

​ ​ பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம்,​​ ரூ.​ 3.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள உணவருந்தும் கூடத்தைத் தொடக்கி வைத்து,​​ சிறப்பு சாலைத் திட்டத்தின் கீழ்,​​ ரூ.​ 3 கோடியில் தார்ச் சாலை அமைப்பதற்கான நிர்வாக அனுமதிச் சான்றிதழை அளித்த அமைச்சர் ராசா,​​ அப்பகுதியை பார்வையிட்டு,​​ தெப்பக்குளம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி,​​ ​ தரமான நடைபாதை அமைக்கவும்,​​ பெரம்பலூர் நகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும்,​​ புதை சாக்கடைத் திட்டப்பணிகள் உள்ளிட்ட அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளையும் விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.​ ​

​ ​ பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ம.​ ராஜ்குமார்,​​ நகராட்சித் தலைவர் எம்.என்.​ ராஜா,​​ துணைத் தலைவர் கி.​ முகுந்தன்,​​ நகராட்சி ஆணையர் ​(பொ)​ கருணாகரன்,​​ அரசு வழக்குரைஞர் என்.​ ராஜேந்திரன்,​​ நகர்மன்ற உறுப்பினர்கள் ஏ.​ அப்துல்பாரூக்,​​ கே.ஜி.​ மாரிக்கண்ணன்,​​ கி.​ கனகராஜ்,​​ என்.​ ஜயக்குமார்,​​ ஜே.எஸ்.ஆர்.​ கருணாநிதி,​​ எம்.​ ரஹமத்துல்லா,​​ எஸ்.​ சிவக்குமார்,​​ ஆர்.​ ஈஸ்வரி,​​ கே.புவனேஸ்வரி,​​ பொற்கொடி ஞானசேகரன்,​​ பி.​ கண்ணகி,​​ நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பன்னீர்செல்வம்,​​ பணி மேற்பார்வையாளர்கள் ராகவன்,​​ மோகன்,​​ கோபி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

திருப்பத்தூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த அமைச்சரிடம் வலியுறுத்தல்

Print PDF

தினமணி 06.10.2010

திருப்பத்தூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த அமைச்சரிடம் வலியுறுத்தல்

திருப்பத்தூர்,​​ அக்.​ 5:​ தேர்வுநிலைப் பேரூராட்சியாக இருக்கும் திருப்பத்தூரை நகராட்சி அந்தஸ்துக்கு உயர்த்தித் தர வேண்டும் என பேரூராட்சித் தலைவர் என்.எம்.சாக்ளா ​ என்று அமைச்சரைக் கேட்டுக் கொண்டார்.​ ​

திருப்பத்தூர் பேரூராட்சியில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.​ அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை வகித்தார்.​ பேரூராட்சி மன்றத் தலைவர் என்.எம்.சாக்ளா,​​ துணைத் தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர்.​ அனைவரையும் செயல் அலுவலர் அமானுல்லா வரவேற்றார்.

இதில் கவுன்சிலர்கள் முருகானந்தம்,​​ சுப்புலெட்சுமி,​​ பதிகண்ணன்,​​ நாகராஜன்,​​ சோமசுந்தரம்,​​ கவிதாகுமார்,​​ ஜிம்கண்ணன்,​​ ரஹமத்துல்லா,​​ யாசின்,​​ காளிமுத்து,​​ சரவணப்பெருமாள் ஆகியோர் தங்கள் வார்டுகளில் உள்ள நிறைகுறைகள் பற்றி அமைச்சரிடம் கலந்தாய்வு மேற்கொண்டனர்.

திருப்பத்தூர் பேரூராட்சிக்கு அளிக்கப்பட்டுள்ள பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து அவர் பேசினார்.​ மீண்டும் அனைத்து வார்டுகளுக்கும் சாலைகள்,​​ மின் விளக்கு,​​ கழிவுநீர் துப்புரவுப் பணிகள் முதலியன சரிசெய்யப்படும் என்றும்,​​ 1-வது வார்டுக்கு பேருந்து நிழற்குடை அமைக்க உத்தரவிட்டும்,​​ 17-வது வார்டுக்கு உள்பட்ட காமராஜர் காலனியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சமுதாயக் கூடம் அமைக்க தனது சொந்த நிதியில் ரூ. 2 லட்சம் வழங்கினார்.​ ​தொடர்ந்து பேரூராட்சித் தலைவர் என்.எம்.சாக்ளா,​​ தேர்வுநிலைப் பேரூராட்சியாக இருக்கும் திருப்பத்தூரை நகராட்சி அந்தஸ்துக்கு உயர்த்தித் தர வேண்டும் என்று அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார்.​ ​ ​

அதேபோல் அனைத்து வார்டு கவுன்சிலர்களிடமும் கலந்தாய்வு மேற்கொண்டு குறைகளை சரிசெய்ய அந்தந்த துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.​ ​

இந்தக் கூட்டத்தை 4 பெண் கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.​ இதில் துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர்,​​ மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன்,​​ முருகேசன்,​​ மின் துறை அதிகாரிகள்,​​ பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.​ துணைத் தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Last Updated on Wednesday, 06 October 2010 11:21
 


Page 43 of 160