Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

திருவண்ணாமலை நகராட்சியில் ரூ104 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமணி 28.09.2010

திருவண்ணாமலை நகராட்சியில் ரூ104 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

திருவண்ணாமலை, செப். 27: நான்கரை ஆண்டுகளில் திருவண்ணாமலை நகராட்சிக்கு ரூ104 கோடியில் வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளன என உணவுத்துறை அமைச்சர் எ..வேலு தெரிவித்தார்.

திருவண்ணாமலை 4வது வார்டு, புதுத்தெருவில் நடந்த விழாவில் 573 பயனாளிகளுக்கு இலவச கேஸ் அடுப்புகளை திங்கள்கிழமை வழங்கி அவர் பேசியதாவது:

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வளர்ச்சித் திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பணக்காரர்கள் வீட்டில் உள்ள அனைத்து வசதிகளும் தமிழகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு முதல்வர் கருணாநிதி ஆட்சியில்தான் பெற்றுள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியின் போது திருவண்ணாமலை நகராட்சிக்கு 5 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ரூ17.45 கோடி. ஆனால் நான்கரை ஆண்டுக்கால திமுக ஆட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ104 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

29 லட்சம் பேருக்கு இலவச கேஸ் அடுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் மூலம் 1.8 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். அதிமுக ஆட்சியில் உணவு மானியமாக |1200 கோடி ஒதுக்கப்பட்டது. முதல்வர் கருணாநிதி ரூ3750 கோடி ஒதுக்கி உள்ளார்.

நகராட்சி சாலைகளை சீரமைக்கும் திட்டத்துக்காக துணை முதல்வர் ஸ்டாலின் ரூ1000 கோடி ஒதுக்கி உள்ளார். இதில் திருவண்ணாமலை நகராட்சிக்கு மட்டும் ரூ5 கோடி கிடைத்துள்ளது.

நல்ல திட்டங்களை நிறைவேற்றியவர்கள் என சீர்தூக்கி பார்த்து மக்கள் ஆதரவு தர வேண்டும் என்றார் அமைச்சர் வேலு.

மாவட்ட ஆட்சியர் மு.ராஜேந்திரன், மக்களவை உறுப்பினர் த.வேணுகோபால், எம்னல்ஏ கு.பிச்சாண்டி, மாவட்ட வருவாய் அலுவலர் சி.கதிரவன், நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், துணைத் தலைவர் ஆர்.செல்வம், நகர்மன்ற உறுப்பினர் ஷாஜகான், ஆணையர் ஆர்.சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

கடந்த 4 ஆண்டுகளில் திருவண்ணாமலை நகராட்சியில் ரூ104 கோடியில் திட்டப்பணிகள்

Print PDF

தினகரன் 28.09.2010

கடந்த 4 ஆண்டுகளில் திருவண்ணாமலை நகராட்சியில் ரூ104 கோடியில் திட்டப்பணிகள்

தி.மலை, செப். 28: தி.மலை நகராட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ104 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என அமைச்சர் எ..வேலு தெரிவித்தார்.

திருவண்ணாமலை நகராட்சி 4வது வார்டில் தமிழக அரசின் இலவச காஸ் இணைப்புடன் கூடிய அடுப்பு வழங்கும் விழா நேற்று மாலை நடந்தது. கலெக்டர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். எம்.பி.,வேணுகோபால், எம்.எல்..,கு.பிச்சாண்டி, மாவட்ட வருவாய் அலுவலர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சித் தலைவர் இரா.திருமகன் வரவேற்றார்.

நல திட்ட உதவிகளை வழங்கி, உணவுத்துறை அமைச்சர் எ..வேலு பேசியதாவது:

தற்போதையை திமுக ஆட்சியில் ஒவ்வொரு குடும்பமும், தனி நபரும் நேரடியாக பயன்பெறும் வகையில் திட்டங்களை முதல்வர் நிறைவேற்றியுள்ளார்.

திருவண்ணாமலை நகராட்சிக்கு மட்டும் கடந்த 4 ஆண்டுகளில் ரூ104 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெறும் நகராட்சிகளில் சாலைகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீட்டுக்கு சிறப்பு அனுமதியை துணை முதல்வர் வழங்கியுள்ளார். அதன்படி, திருவண்ணாமலை நகராட்சிக்கு ரூ5 கோடி நிதி பெறப்பட்டு சாலைகள் அமைக்கப்படுகிறது. பொது விநியோக திட்டத்துக்கு தமிழக அரசு ரூ3,750 கோடியை மான்யமாக ஒதுக்குகிறது. ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் பொது விநியோக திட்டத்துக்கு ரூ1,200 கோடி மட்டுமே மான்யமாக வழங்கப்பட்டது. தகுதியுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இலவச காஸ் இணைப்புடன் கூடிய அடுப்புகள் வழங்க வேண்டும் என்பதற்காக, கூடுதல் காஸ் இணைப்பு ஒதுக்கீட்டை மத்திய அரசிடம் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பெற்று வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், நகராட்சித் துணைத் தலைவர் ஆர்.செல்வம், நகராட்சி ஆணையாளர் சேகர், பொறியாளர் சந்திரன், தாசில்தார் மதிவாணன், வட்ட வழங்கல் அலுவலர் ஏ.ஜி.மூர்த்தி, கவுன்சிலர்கள் கார்த்திவேல்மாறன், ஷாஜகான், கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

பாளை. மாநகராட்சி பூங்கா பராமரிக்கப்படுமா?

Print PDF

தினமலர் 27.09.2010

பாளை. மாநகராட்சி பூங்கா பராமரிக்கப்படுமா?

திருநெல்வேலி:பாளை. இங்கிலீஷ் சர்ச் தெருவில் புதர் மண்டி துர்நாற்றம் வீசும் பூங்காவை பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நெல்லை மாநகராட்சியின் சார்பில் முதல்வரின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பாளை. இங்கிலீஷ் சர்ச் தெருவில் மாநகராட்சி பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவில் உடற்பயிற்சி செய்வதற்கான உபகரணங்கள் மற்றும் சிறுவர்கள் பொழுது போக்குவதற்கான உபகரணங்களும் உள்ளன.

இந்த பூங்காவிற்கு பாளை பகுதியை சேர்ந்த சிறுவர்கள் விடுமுறை நாட்களில் சென்று பொழுதை கழித்து வந்தனர்.நாளடைவில் இந்த பூங்கா சரிவர பராமரிக்கப்படாததால் முட்புதர்களாக மாறியதோடு, உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்துள்ளன. மேலும் பூங்காவை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலி சேதமடைந்துள்ளதால் சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக மாறி வருகிறது. இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் பூங்காவை திறந்த வெளி கழிப்பிடமாகவும், குப்பை கொட்டும் இடமாகவும் மாற்றி வருகின்றனர். இதனால் பூங்கா சுகாதாரமற்று காணப்படுவதோடு, துர்நாற்றமும் வீசுவதால் சிறுவர்கள் பூங்காவிற்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர்.எனவே மாநகராட்சி நிர்வாகம் புதர்மண்டியுள்ள பூங்காவை புதுப்பிப்பதோடு, பழுதடைந்த உபகரணங்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


Page 46 of 160