Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

குன்னூர் நகரில் ரூ34 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்

Print PDF

தினகரன் 27.09.2010

குன்னூர் நகரில் ரூ34 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்

குன்னூர், செப்.27: குன்னூர் நகர் பகுதியில் ரூ.34 லட்சம் செலவில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருவதாக குன்னூர் நகராட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

குன்னூர் நகராட்சி தலைவர் ராமசாமி கூறியதாவது:

குன்னூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் ஆதி திராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய ஆதி திராவிட கிறிஸ்தவர்கள் இறக்கும் பட்சத்தில் ஈம சடங்கிற்காக நகராட்சி சார்பில் ரூ500 மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. தற்போது இத்தொகை ரூ2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நகராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம், சந்திரா காலனியில் ரேஷன் கடை, சத்திய மூர்த்தி நகரில் தடுப்பு சுவர், கன்னி மாரியம்மன் கோயில் தெரு பகுதியில் நடைபாதையுடன் கூடிய கழிவு நீர் கால்வாய், மிஷின் ஹில் பகுதியில் நடைபாதை என ரூ19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நகராட்சிக்கு உட்பட்ட மோர்ஸ் கார்டன் பகுதியில் பூங்கா பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. வரும் காலங்களில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ரூ5

லட்சம் மதிப்பில் இப்பூங்காவை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பணிக்கான டெண்டரும் விரைவில் விடப்படும். நகராட்சிக்கு குடிநீர் நிதி திட்டத்தின் கீழ் பழைய ஜிம்கானா தடுப்பனையை அகற்றி புதிய தடுப்பனை கட்ட ரூ10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிக்கான டெண்டரும் விடப்பட்டுள்ளது.

நகர பகுதியில் வளர்ச்சி பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டதன் பேரில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் வகையில் வளர்ச்சி பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

 

சிறுமுகை பேரூராட்சியில் ரூ. 13 லட்சத்தில்வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமணி 23.09.2010

சிறுமுகை பேரூராட்சியில் ரூ. 13 லட்சத்தில்வளர்ச்சிப் பணிகள்

மேட்டுப்பாளையம்,​​ செப்.​ 22: சிறுமுகை பேரூராட்சியில் வளர்ச்சிப் பணிகளுக்கென ​ரூ. 12.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

​ தனது தொகுதி நிதியிலிருந்து இந்த நிதியை மேட்டுப்பாளையம் எம்எல்ஏ ஓ.கே.சின்னராஜ் ஒதுக்கீடு செய்துள்ளார்.​ 6-வது வார்டில் ரூ. 50 ஆயிரம் செலவில் கான்கிரீட் தளம்,​​ 9-வது வார்டில் ரூ. 70 ஆயிரம் செலவில் வடிகால் வசதி,​​ 10-வது வார்டில் ரூ. 65 ஆயிரம் செலவில் கான்கிரீட் சாலை,​​ 1-வது வார்டில் ரூ. 3.25 லட்சம் மதிப்பில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க புதிய கட்டடம்,​​ சிறுமுகைபுதூர் தொடக்கப் பள்ளியில் ரூ. 2 லட்சம் மதிப்பில் சுற்றுச் சுவர்,​​ எலகம்பாளையத்தில் ரூ. 2.50 லட்சம் மதிப்பில் தார்சாலை,​​ சந்தை திடலில் ரூ. 3 லட்சம் மதிப்பில் நியாய விலைக்கடை ஆகிய திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

​ இதன் தொடக்க விழா மற்றும் பூமி பூஜை,​​ சிறுமுகை தொடக்கப் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.​ வார்டு கவுன்சிலர் சிறுமுகை பாபு தலைமை வகிக்க,​​ ராமமூர்த்தி வரவேற்றார்.​ எம்எல்ஏ ஓகே சின்னராஜ் பணிகளை தொடங்கி வைத்தார்.​ நிகழ்ச்சியில் காரமடை ஒன்றியக்குழு தலைவர் ராஜ்குமார்,​​ பேரூராட்சி செயல் அலுவலர் கல்யாண சுந்தரம்,​​ தலைமை எழுத்தர் முத்துசாமி,​​ வார்டு கவுன்சிலர்கள் சாமிநாதன்,​​ செல்வராஜ்,​​ அதிமுக செயலர் ரேணுகாராஜன்,​​ மாவட்ட கவுன்சிலர் சிவசாமி,​​ கூட்டுறவு சங்க செயலர் சம்பத்குமார் கலந்து கொண்டனர்.

 

மாநகராட்சியுடன் பூண்டியை இணைக்க வலியுறுத்தல்

Print PDF

தினமலர் 23.09.2010

மாநகராட்சியுடன் பூண்டியை இணைக்க வலியுறுத்தல்

அவிநாசி:திருமுருகன்பூண்டி பேரூராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டுமென கொ.மு.., வலியுறுத்தியுள்ளது.திருமுருகன்பூண்டி நகர கொ.மு.., சார்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்:திருப்பூர் மாநகராட்சியுடன் திருமுருகன்பூண்டியை இணைக்க வேண்டுமென, பேரூராட்சி நிர்வாகம் கடந்த 2007 ஜூலை 17ல் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அத்தீர்மானத்தை வரவேற்று மாநகராட்சி நிர்வாகம் நிறைவேற்றியுள்ள நிலையில், இப்போது, இணைக்கக்கூடாது என்று பேரூராட்சி கவுன்சிலர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

திருப்பூருக்கு மிக அருகில் பூண்டி உள்ளதால், அதிகரித்து வரும் பனியன் நிறுவனங்கள், தொழிலாளர்களின் வருகையால் பெருகி வரும் குடியிருப்புகள் என வளர்ச்சி பல மடங்காக அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், மாநகராட்சியுடன் இணைக்கும்போது, பூண்டியின் வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்கும்.தற்போது, பூண்டியில் மிக மோசமாக உள்ள சாக்கடை வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுவதோடு, மக்களின் பிரச்னையும் உடனுக்குடன் தீர வாய்ப்புள்ளது. மாநகராட்சியுடன் இணைந்தால் வரி உயரும் என்கின்றனர். ஆனால், தற்போது இணைய உள்ள 15 வேலம்பாளையம் மற்றும் ஊராட்சிகளிலும் ஏழை தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.எனவே, மாநகராட்சியுடன் பூண்டி இணையும்போது அதிகரித்து வரும் குடியிருப்புகள், பொதுமக்களுக்கு அதிக வசதிகள் உடனுக்குடன் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி, மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும், என கூறப்பட்டுள்ளது.

 


Page 47 of 160